Wednesday, December 4, 2019

தமிழ்_கலைக்களஞ்சியம் என்ற #அரிய_அருட்கொடை

#தமிழ்_கலைக்களஞ்சியம் என்ற 
#அரிய_அருட்கொடை
---------------------------------
அகிலத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் திரட்டி பொருள்வாரியாக, தலைப்புவாரியாக அகர வரிசையில் 10 தொகுதிகளாக தமிழ் கலைக்களஞ்சியம் 20 ஆண்டு உழைப்பில் கடைசி தொகுதி 1968இல் வெளியிடப்பட்டது. இந்த அரிய உழைப்பில் தமிழ்த்தாய் வழங்கிய அருட்கொடைகளாகும். அப்போது கணிணி எல்லாம் இல்லாமல் தட்டச்சு செய்து 1200 கட்டுரையாளர்கள், 15000 தலைப்புகள், 7500 பக்கங்களில் 10 தொகுதிகளாக இன்றைக்குள்ள வசதிகள் இல்லாத காலத்தில் வெளியிடப்பட்டது ஒரு மாபெரும் அரிய செயல்களாகும். ஏராளமான அரிய தகவல்களை திரட்டி இந்த சாதனையை பல்வேறு தமிழறிஞர்கள், அறிஞர்கள் செய்ததை இன்றைக்கும் நாம் நன்றியுணர்வோடு நினைத்து பார்க்க வேண்டும். இந்த திருப்பணியை தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், பெரியசாமி தூரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதன் துணை பொறுப்பாசிரியராக திருகூடசுந்தரம் பணியாற்றினார். 



இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளாக வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம.ப.பெரியசாமித்தூரன். 

தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 லட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டு, தனியார், நிறுவன, அரசு ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

இதற்காக பங்களித்தவர்கள் 
- 5 நிர்வாகக் குழுக்களின் மூலம் 74 உறுப்பினர்கள் 
- 21 பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் மூலம் 132 உறுப்பினர்கள் 
- 27 ஆய்வுக் குழுக்கள் வழியாக 66 உறுப்பினர்கள்
- 1 கலைச்சொற் குழுவில் 40 உறுப்பினர்கள்

-----------------------------

தொகுதி 1  - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
தொகுதி 2  - 1955 ஆம் ஆண்டு - 760 பக்கங்கள்
தொகுதி 3  - 1956 ஆம் ஆண்டு - 756 பக்கங்கள்
தொகுதி 4  - 1956 ஆம் ஆண்டு - 778 பக்கங்கள்
தொகுதி 5  - 1958 ஆம் ஆண்டு - 750 பக்கங்கள்
தொகுதி 6  - 1959 ஆம் ஆண்டு - 770 பக்கங்கள்
தொகுதி 7  - 1960 ஆம் ஆண்டு - 754 பக்கங்கள்
தொகுதி 8  - 1961 ஆம்  ஆண்டு - 758 பக்கங்கள்
தொகுதி 9  - 1963 ஆம் ஆண்டு - 751 பக்கங்கள்
தொகுதி 10  - 1968 ஆம் ஆண்டு - 560 பக்கங்கள் 
இந்த தமிழ் கலைக்களஞ்சியத்தை போன்று வேறு நிறுவனங்கள் கொண்டுவந்த தமிழ் கலைக்களஞ்சியங்கள் மனதை ஈர்க்கவில்லை என்பது யதார்த்தமான விடயம்.

படம் 1. 
*********
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய குழுவினர் 24/10/1947இல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

படம் 2. 
*********
கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுப்பின் முதல் பக்கம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-12-2019

#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
#தமிழ்_கலைக்களஞ்சியங்கள்
#Tamil_Encyclopedia
#Avinasilingam_chettiyar
#Periyasamy_Thooran
#Madras_University
#சென்னை_பல்கலைக்கழகம்
#அவினாசிலிங்க_செட்டியார்
#பெரியசாமி_தூரன்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...