Wednesday, September 27, 2023

#*பெண்களுக்கான33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா* ஒரு பார்வை



—————————————
பெண்களுக்கான 33 சத வீத இட ஒதுக்கீடு மசோதா பல வருடங்களுக்கு முன்பு முன்மொழியப் பட்டு அது இன்னும் நடைமுறைக்கு ஏன் வரவில்லை என்பதைச் சற்று ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியுள்ளது. மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் கூட குறைந்தபட்சம் பெண்களுக்கான 33 சதவீதத்தை தங்களுடைய நாடாளுமன்ற சட்டங்களில் கூட இன்னும் அமலுக்கு அவர்களால் கொண்டு வரஇயலவில்லை.ஸ்காண்டி
(Photo-The Hindu 27-9-2023)



நேவியா டென்மார்க் , நார்வே மற்றும் ஸ்வீடன்  நாடுகளின் ரிஸ்டேக் (நாடாளுமன்றம்) கில் பெண்களை நியமித்து உறுப்பினர்களாக நிரப்படுகின்றனர்

சுர்ஜித் காலத்தில் சிபிஎம் கட்சி இதை ஆதரித்தது. ஆனால் மே வங்க அன்றைய முதல்வர் ஜோதிபாசு இதை பெரியாக கவனத்தில் கொள்ளவில்.காங்கிரஸ் கடசி உள் இதற்கு 1980-90களில் எதிர்வினைகள் இருந்தன.

இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை முறை முன்மொழிப்பட்டாலும்  முன்பு லல்லு பிரசாத் யாதவ், சரத் யாதவ்,  முலாயம் சிங் யாதவ், போன்றவர்களும் ராஷ்ட்ரிய சமாஜ்வாடி என கட்சிகள் உட்பட பலரும் அது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று நிராகரித்திருக்கிறார்கள். பெண்களுக்கான 33 சத வீத இட ஒதுக்கீடு மசோதாவை சரத் யாதவ் நாடளுமன்ற மக்கள் அவையில் கிழித்து தூக்கி எறிந்தார்கள்.
1989இல் இம்மசோதாமீதான நாடாளுமன்ற விவாதங்களின்  போது வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, வாஜ்பாய்,அத்வானி 
போன்றோரும் எதிர்த்துள்ளார்கள்.

அவர்கள் சொல்லும் பெரும்பாலான காரணம் சாதி இன குல மேட்டிமைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான் மேலோங்கி அரசியலுக்கு வர முடியும் .அடித்தள உழைக்கும் பிரிவினர்களில்  இருந்து எந்த ஒரு பெண்ணும் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்க இயலாது என்று வாதிடுகிறார்கள்.

போக இந்திய அளவில் நகராட்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற ஊராட்சித்தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு கொடுத்தாலும்  பதவிக்கு வரும் அந்தப் பெண்களை செயலற்றவர்களாக்கி அவர்தம் ஆண்களே மேலாதிக்கம் செய்கிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டை பல வகையிலும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

அதேபோல படித்த நாகரிகமான பெண்கள் தங்களிலும் கீழான அடித்தள பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வை அவர்கள் அறிவுற்ற பத்தாம் பசலிகள் என்பதுதான். அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் நாகரிகமடைய மாட்டார்கள் என்பது மாதிரியான ஒரு taboo கற்பிக்கப்படுகிறது. போக இந்த மேல் தட்டு பெண்களின்  குழுக்கள் அவர்கள் சந்திக்கும் இடங்கள் எல்லாமே ஒரு சம்பந்தமும் இல்லாமல் தங்களுக்குரிய வசதியை ஒரு நாகரிகமாகக் கருதி வாழ்க்கையை  எல்லா வகையிலும் சுதந்திரமாக அனுபவிக்க உரிமை உண்டு என்கிற  அளவிற்கு தரம் தாழ்ந்து தன்னிச்சைப் போக்கை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கு தேசம் அதன் உழைக்கும் பிரிவினர் மற்றும் இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல் அதிகாரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் இவர்களும் பெண்களைப் படிநிலைப் படுத்துகிறார்கள் .மேலும் பெண்ணுரிமை என்கிற பெயரில்  ஒரு பக்கம் போராடுவது மறுபக்கம் உல்லாசமாக இருப்பது எனும் அளவிற்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்றெல்லாம் அவர்கள் காரணங்களைக் கூறுகிறார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக சீர்திருத்தி  நாடு முழுக்க சரிபாதி ஆக இருக்கும் பெண்களுக்கு வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் கொடுப்பதில் திறமைசாலிகளை ஆக்கபூர்வமாக உழைப்பவர்களை இனம் கண்டு அவர்களை முதன்மைப் படுத்திய பிறகு தான்  இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் . என்பதைத்தான் நானும் முக்கியம் என்று குறிப்பிடுகிறேன் .

அப்போதுதான் பெண்களின் சரி பாதி உண்மையான உழைப்பு இந்த நாட்டிற்கு கிடைக்கும். வெறுமனே  பயன்ற்ற பெண்ணியம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை.

இவை ஒருபுறம் இருக்க இன்றைய நாடாளுமன்றத்தில் 800 வகையான கடினக் கொலை கொள்ளை லஞ்சம் கற்பழிப்பு க் குற்றங்களை செய்த கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டிய 194 நபர்கள்  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதுவே கொடுமை என்றால்குறைந்தபட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்று பார்க்கும்போது கூட அவர்களில் 250 பேருக்கு மேல் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள். இந்த தொடர் குற்றவாளிகள் மாநிலங்களிலும் அதன் சட்டமன்ற அவைகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள்.ஓட்டை விலை வைத்து வாங்கி வந்தவர்கள் இவர்கள். எங்கே ஜனநாயகம்….சாக அடிக்க பட்டது. வாரிசு அரசியல் வேறு ஒரு கொடுமை… தகுதி தரம் இல்லாதவர்கள் எம்பிகள், எம்எல்ஏகள், மந்திரிகள் ( எந்திரிகள்) என இங்கு நிலைமைகள…..

எதார்த்தம் என்னவெனில் இத்தகையக் குற்றவாளிகள் நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் அதிகாரத்திலும் நீடிக்க எளிய மக்கள் தங்களின் அன்றாட வாழ்வின் சிறையிலும் இருக்கிறார்கள்.
மேற்சொன்ன குற்றவாளிகளுக்கு
சாதகமாகத்தான் இன்றைய நடுநிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

நாம் பெரும்பாலும் சமூக நீதிப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.சமூக நீதி நமது உரிமை அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஒரு சமூகம் பாழ் பட்டு கொண்டு இருக்கும் போது அறிவு ஜீவிகள் அதில் இறங்கி இந்தசமூகத்தின் நல்லிணக்கத்திற்கு முழுமூச்சாய்  பாடுபட வேண்டும். எதிர்காலம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியும்,இறையாண்மையோடு சம்பந்தப்பட்டது.

குறிப்பாக சட்டம் மருத்துவம் போன்றவை திறமையுள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும். அதில் அனுபவமும்  பட்டறிவும் சமூக சேவை மனப்பான்மையும் போக மனிதர்கள் மீதான மரியாதையும் அக்கறையும் உள்ளவர்களிடம்தான்  அவை ஒப்படைக்கப்பட வேண்டும்.

சமூக நீதி என்கிற பெயரால் அரைகுறை புத்தி உள்ளவர்களிடம் இத் துறைகளை ஒப்படைப்பது மிக மோசமான விளைவுகளையே உண்டாக்கும். தேங்கி கிடக்கும் இந்திய வழக்குகள் இன்று திறமையற்ற  வலிமையற்ற நீதியிடம் தான் மாட்டிக்கொண்டுள்ளது.

மாற்றங்கள் என்பது கற்பனை அல்ல நடைமுறை என்பதை பகுத்தாய்ந்து பார்ப்பது தான் அறிவுறவோர் சிந்தனை.

#பெண்களுக்கான33_சதவீத_இட_ஒதுக்கீடு_மசோதா #33percentReservation

கே எஸ் இராதாகிருஷ்ணன். 
#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-9-2023.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...