Tuesday, September 5, 2023

#வஉசியின்நூற்றாண்டு விழா #தூத்துக்குடி துறைமுகத்தில், #வஉசி கல்லூரியின் வெள்ளிவிழா (5-9-1972)

#வஉசியின்நூற்றாண்டு விழா #தூத்துக்குடி துறைமுகத்தில், #வஉசி கல்லூரியின்வெள்ளிவிழா (5-9-1972)
—————————————————————
சுதேசி இயக்கத்தின் தளபதி வ.உ.சி. 152 வது பிறந்த நாள் இதே நாள் 5-9-1972 காலை 10 மணியளவில் வ.உ.சி.யின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் துறைமுகத்திலும், வ.உ.சி.கல்லூரியின் வெள்ளிவிழா என இரண்டு விழாக்கள் நடந்தது . இந்த இரண்டிலும் கலந்து கொண்டேன். அப்போது ஸ்தாபன காங்கிரஸ் மானவர்அமைப்பில் இருந்தேன்.



முதலில் துறைமுக விழாவில வ. உ.சி நூற்றாண்டு விழா  நினைவு அஞ்சல் தலையை அன்றைய பிரதமர் இந்திர காந்தி வெளியிட தமிழக முதல்வர்  கலைஞர் பெற்று கொண்டார்.தமிழக ஆளுநர் கே. கே. ஷா அவர்கள் வ. உ. சி. நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.




பின், அன்று 1 1/2 மணியளவில் வ.உ.சி.கல்லூரியின் வெள்ளிவிழாவில்
பிரதமர் இந்திர காந்தி , முதல்வர்  கலைஞர்.தமிழக ஆளுநர் கே. கே. ஷா, கூட்டுறவு அமைச்சர் சி.பா. ஆதித்தனார், 
ஏ. பி. சி. வீரபாகு, கல்லூரி முதல்வர் ஶ்ரீதரமேனன் என ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சில் முதல்வர் கலைஞர் மேடையில பேச ஆரம்பித்தவுடன் மாணவர்கள் சத்தமும் குழப்பம் ஏற்பட்டது. செருப்புகள் மேடைக்கு பறந்தன. (அப்போது மாணவர் போராட்டம், விவசாய போராட்டத்தில் துப்பாக்கிசூடுகள்
நடந்த நேரம்) உடனே திமுக நாடாளுமன்ற
உறுப்பினர் எம். எஸ். சிவசாமி மற்றும்  சிலரோடு கைநீட்டி ஓடி வந்தனர். காவல் துறையினர் லத்தியை கொண்டு அங்கிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இந்திரா காந்தி இதை கவனித்தார். அன்றைக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்னும் இருக்கின்றனர்.
அவர்களுக்கு வயது இப்போது 66-70 வரை
இருக்கலாம்

ஏ. பி. சி. வீரபாகு ஆலோசனையை  ஏற்று உடனடியாக பாரட்டிய விடுதலைப் போராட்ட வீரரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். சி. வீரபாகு ஆதரவில் வ. உ. சிதம்பரம் கல்விச் சங்கம் உருவானது.
1946ஆம் ஆண்டில், வ. உ. சிதம்பரம் நினைவு நிதி திரட்டல் தொடங்கப்பட்டது. ராஜாஜி வ. உ. சி கல்விச் சங்கமானது 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.பல தடைகளைத் தாண்டிய பிறகு, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பி. குமரசாமி ராஜா 1947 இல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போதைய மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற, இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு படிப்புகள் தொடங்கப்பட்டன. வெளி மாணவர்களுக்காக வளாகத்திற்குள் கட்டப்பட்ட மூன்று தங்கு விடுதிகள் உட்பட மொத்தம் ஐந்து விடுதிகள் அமைக்கப்பட்டன.இக்கல்லூரிஆனது 1966 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது

#வஉசியின்நூற்றாண்டுவிழா #தூத்துக்குடியில்_துறைமுகத்திலும், #வஉசிகல்லூரியின்_வெள்ளிவிழா (5-9-1972)

#VOC
#VOCCollege
#tuthukudi
#tuticorin
#தூத்துக்குடி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-9-2023.


No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...