Tuesday, September 26, 2023

*காவேரி* *முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு*

*காவேரி*
*முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு  நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு*

————————————
இன்றைய தினமணி செய்தியில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி கார்நாட மாநில ஆதாரவாக தலையிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக வாட்டல் மடப்பா நாகராஜ் போல கோரிக்கை வைத்துள்ளார். 

இது  இவரை பற்றிய கடந்தகால 1990கள் செய்தி.

காவிரி தீர்ப்பாணையத்திற்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சித்த கோஷ் முகர்ஜி தலைவராக நியமிக்கப்பட்டு அந்த வழக்கை விசாரிப்பதற்கு என்று அவர் குடகு  பாசன நிலங்களையும் தஞ்சையில் காவிரி நீரின் தேவை எவ்வளவு என்பதை அறிவதற்காகவும்  குடகு பகுதிக்கும் தஞ்சைக்கும் வந்திருந்தார்.




அந்நேரத்தில் காவேரி டெல்டா - தஞ்சை பகுதி கோவில்களில் அவர் விரும்பி சென்று போது பூரண கும்ப மரியாதை எல்லாம் செய்தார்கள்.

இந்த நிலையில்,  தேவகவுடா சித்த கோஷ் முகர்ஜியை காவிரி தீர்ப்பாணையத்தின் நடுவர் பதவியில் நீடிக்க முடியாது;  தமிழகத்தில அவரை வரவேற்று பயன் அடைந்துள்ளார். எனவே எங்கள் கார்நாடகத்தின்கு காவேரியில நீதி அவரிடம் கிடைக்காது என பெங்களூர் உச்ச நீதிமன்றத்தில் quo warranto  ரிட்  மனுவை தாக்கல் செய்தார்.

தேவகவுடா அவர்கள் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு எதிராக  ரிட்மனு தாக்கல் செய்து வழக்கும் உயர் நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்தபோது நாட்டின் பிரதமர் ஆகிறார். இதற்கு அன்று ஆதாரவாக திமுக, தமாக தமிழக கடசிகளும் இருந்தன.

நிலைமை இப்படி இருக்க, 1996 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் தோற்ற முடிவு வந்த மறு நாள்;  கோவில்பட்டியில் இருந்து   சென்னை திரும்பிய போது திருச்சிக்கு பக்கத்தில் அதுவும் அந்த காவிரி பாலத்தில் கார்செல்லும் நேரம் தேவகவுடா நாட்டின் பிரதமர் ஆகிவிட்டார் என்கிற செய்தியை ஒளிபரப்பினார்கள். இவர் எப்படி பிரதமர் ஆக முடியும்? தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு எதிராக காவேரி ஆணைய நடுவர் மீதே வழக்கு போட்டவர் ஆயிற்றே… என மனதில் பட்டது.

உடனே மறுநாள் தேவகவுடா இந்திய மாநிலங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் பிரதமரை பதவிக்கு பதவி பிரமாணம் என அவர் மீது நானும் quo warranties ரிட் மனுவை தாக்கல் செய்தேன்.
நீதிபதி கனகராஜ் விசாரித்து தேவகவுடக்கும் மத்திய அரசுக்கு தாக்கீது(நோட்டிஸ்) அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

எனது வழக்கு பற்றி செய்தி வந்தவுடன் பிரதமராக இருந்த தேவகவுடா அவரின் வழக்கை  உடனடியாக வாபஸ் வாங்கி நான்  கர்நாடகத்திற்கு மட்டுமானவன் அல்ல இந்தியாவிற்கே தலைமையானவன் என்கிற மாதிரிநடந்துகொண்டார்.உயர்நீதிமன்ற
த்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 
டி ஆர் பாலு எல்லாம் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தேவகவுடா அவர்கள் வழக்கை வாபஸ் பெற்ற பின் சில மாதங்களுக்கு பின்அவரை சந்திப்பதற்காக  மத்திய அமைச்சாரக இருந்த ராம் விலாஸ் பஸ்வான்  அனுமதிவாங்கி தந்து டில்லி சென்றேன்.

அங்கே பிரதமர் தேவகவுடா
மிஸ்டர் கே எஸ் ராதாகிருஷ்ணன் யு ஆர் வைகோமேன். ந்தி நீர் இணைப்பு சுப்ரீம் கோர்ட் வழக்கை உங்கள் நியாயங்கள்  இருக்கட்டும்…என சொல்லி என்ன என்ற அறியமால் அவரது தொடர் பேச்சின் மூலம்
என்னிடம் மதிப்பு குறைவாகவும் நடந்து கொண்டார்.

மூன்று மாநிலங்கள் ஏன் நான்கு மாநிலங்களும் உள்ளிட்ட முழு இந்தியாவிற்கும் அப்போது அவர்தான் பிரதமர். ஆனால் இன்று அவர்தான் கர்நாடகாவுக்கு  பரிந்துரையும் செய்கிறார்.
ஜாலத்திற்கு ஒரு பாசம் கோலத்துக்கு ஒரு வேஷம் என்று பேசுகிற இவர் எப்படி ஒரு முன்னள்பிரதமர் அந்தஸ்தில் இருந்திருக்க முடியும் .

முன்னள்பிரதமர் அந்தஸ்தில் தேவகவுடா, உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அந்தஸ்தில் வெங்கட்ராமையா என கர்நாடக சேர்தவர்கள் காவேரி சிக்கலில் அந்த மாநில கட்சிகள் குழவில் வெவ்வேரு நேரத்தில் இடம் பெற்ற அநீதிகள் உண்டு

அன்றைக்கு நான் மட்டுமே முயன்று இத்தனைக்கும் தனி ஒருவனாய் பொதுநல வழக்காய் கொண்டு சென்று போராடிய போராட்டங்கள் பலருக்கும் நினைவு மறதியாக இருக்கலாம்.
இன்றைக்கு  காவேரியை பற்றி பேசுவர்கள் நினைக்க வேண்டும்.. 28 ஆண்டுகள் கடந்து விட்டது…
#CauveryWater
#காவேரி
#தேவகவுடா_காவேரி

கே எஸ் இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
26-9-2023.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...