Sunday, October 1, 2023

#*எனது சுவடு-பகுதி42* *Never, ever, run back to what broke you*. -KSR- கேஎஸ்ஆர்

#*எனது சுவடு-பகுதி42*

*Never, ever, run back to what broke you*.

*திரியில் எரியும் தழலில்*
*தன்முறைமைக்கென*
*கணம்தோறும்* *தவமிருக்கிறது* 
*எண்ணெய்த்துளி*.
*தானே எரிதலுக்கென செந்தழலாய் மாறிப்போவதற்கென காத்திருத்தலின் அகஒழுங்கு எப்பேற்பட்டதானது*?

*முழுக்க தகிக்கப்போகும் ஒவ்வொரு டிகிரி சூடேறுதலும்* 
*அவிக்கான முன்னேற்பாடு*.

*அவியுமுன்* 
*அவிழ்தலின் நிலைபுரிந்து* *மண்அழுத்ததத்திலேயே புதைந்து கிடந்தபின்*
*துளிர்த்த அரும்பில்* 
*சூல்கொண்டபின்*
*பச்சையம் வெளிற*
*வெளியில் காய்ந்தபின்*
*பொழுதுதோறும் பொத்திவைத்து வளர்த்தெடுத்த தாபம்*.

*நிலையில்லா நடனமாய் எரிந்திடும்*
*சுடரென விளங்க* 
*வெளிச்சமாய் சிதற*
*அவியென தலைவிரித்து* *நடமிட*
*இதோ.  இதோ*.. *நெருக்கமாய்* *பக்கத்திலிருக்கும்* 
*சுவாலை*
*நெருங்க*
*நித்யம் நிர்மலமாய்* *உறைந்திட* 
*அக்னியின் நாவுகள்* 
*தீண்ட அலைந்திட*
*ஜ்வலிக்கிறது முன்னெப்போதுமில்லாத சிகப்பு செளந்தர்யத்துடன்*
*விகசிக்கிறது திசையிலியான விளக்குமுகம்*. 

*குளிர்வித்து விடாதீர்கள். பற்றியெரியும் பாதையை மறுபடி முதலிலிருந்து  தொடங்குதல்* 
*ஆகப்பெரும் கடினம்*

கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 

#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்வாய்ஸ், #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan,#kamarajar, #kingmaker, #congress , #DMK,  #socialjustice, #திமுக, #nedumaran , #kamarajar , ,#kamarajar #தமிழகவிவசாயபோராட்டம். #மாணவர்போராட்டங்கள்_அண்ணாமலைபல்கலைகழகம்_பாளையங்கோட்டை_திருச்சி #அண்ணா_homeland #congress_O
#ஸதாபனகாங்கிரஸ் #தமிழ்நாடுசெய்தித்தாள் #மதுரை

https://youtu.be/3CUUvLpKrxI?si=RWa5GNN5s2gqN4Wj

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
1-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...