Saturday, June 1, 2024

#*மதநல்லிணக்கம் என்பதே சரியானது*

#*மதநல்லிணக்கம் என்பதே சரியானது*
———————————
மதச்சார்பின்மை என்பது அர்த்தமற்ற ஒன்று . அது ஒரு பொருந்தாத கூற்று. இந்தியாவைப் பொறுத்தவரை மத நல்லிணக்கம் என்று தான் அல்லது மத நல்லிணக்க அரசு என்று தான் கூற வேண்டும். மதச்சார்பின்மை என்கிற பெயரால் உண்மையில் நீங்கள் ஆன்மீகத்தை மறுதலிக்கிறீர்கள். ஒருவர் சார்ந்த அந்தத் மதம்  குறித்து அதில் ஏதேனும் குறை ஏற்படும் போது நீங்கள் விமர்சனம் செய்யலாம்.

அதை விட்டுவிட்டு பொதுவாகவே தனிமனிதன் நம்பிக்கை ஆன்மீகத்தின் மீது குறைகளைச் சொல்வது தனிமனித உரிமையில் தலையிடுவது ஆகும்.

•திருக்கோவில்களில் ஆறு கால பூஜை நடக்கட்டும். 

•தேவ ஆலயங்களில் மணியோசையில் மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் ஜெபம்
செய்து பிரார்த்திக்கட்டும். 

•மசூதிகளில் பாங்குகளை ஓதி அவர்கள் நமாசு செய்யட்டும்.

• குருத்வாரக்களில் கிரந்தங்கள் ஒலிக்கட்டும்.

• இறை மறுப்பாளார்கள் தங்கள்  நாத்திக கருத்துக்களை சதுக்கங்களில் பேசட்டும்

அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளை நாம் விமர்சிக்கக் கூடாது. இது ஒரு மத நல்லிணக்கப் பார்வை. 

வாழும் சூழலின் மீது ஒரு கவனத்தை ஏற்படுத்தவும் யார் சிலரோ/ஒருவருக்கு 
தியானம் தேவைப்படுகிறது. அவ்வளதான்.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-6-2024.

#மதநல்லிணக்கம்
#மதச்சார்பின்மை


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...