Tuesday, June 25, 2024

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.
••••
"வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி களின் சுயமரியாதையை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது... அண்ணா❓கலைஞர் காலத்தில் இப்படி இல்லையே⁉️உறுதிமொழியை தவிர வேறு எதுவும் அவை ஆவனத்தில் ஏறாது என தெரியதா⁉️டயர் நக்கிகள் என இவர்கள் சொல்லி ஏகடியம் செய்ய என்ன தகுதி உள்ளது. வேற என்ன மக்கள் பிரச்சினையா பேச போறாங்க இதெல்லாம் எதிர்பாத்ததுதானே…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பில் தொடர்பில்லாத பிரச்சனைகளை முன்வைத்து தங்களுடைய விசுவாசங்களை காட்டியது அருவருக்கத் தக்கது மட்டுமல்ல ,
தவறான நடைமுறையாகும்.

திமுக எம்பிக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் தளபதி வாழ்க!
 என்று சொல்வதோடு 
"தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி" என்று சொல்லத் தவறவே இல்லை.

 அதைக் கடந்து யாரெல்லாம் தங்களுக்கு அரசியலில் பின்புலமாக இருந்தார்கள் என்பதை பொதுவெளியில் ஒரு அரசியல் சாசனத்தை வழிநடத்துகிற அவையில் எ.வ. வேலு வாழ்க!
கே கே எஸ் எஸ் ஆர் வாழ்க! கனிமொழி வாழ்க!
 என்றெல்லாம் துதி பாடியது எந்த விதத்திலும் அரசியல் நாகரீகம் அல்ல.
 இந்தப் போக்குகள் கண்டிக்கப்பட வேண்டும் .
தவிர்க்கப்பட வேண்டும்.
 காரணம் இவர்கள் எதற்காக பொறுப்பேற்க வந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிவிட்டு வேறு எதையும் பேசாமல் இவர்களுடைய உரைகளிலும் இதே போல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் புராணம் பாடுவது கேட்பதற்கு புளித்துப் போய்விட்டது.
 இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையை பேச வந்த எ.வ. வேலு அவர்கள் புறநானூற்று பாடல் ஒன்றைச் சொல்லி புறநானூற்றில் போருக்குச் சென்ற அந்த மகனைப் போல உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று அவருக்கு வெண்சாமரம் வீசுகிறார். இதெல்லாம் வெளிப்படையான ஒப்பந்தங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத வேண்டி உள்ளது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-6-2024.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...