Saturday, June 15, 2024

#*உல்லாசபூமி இங்குஉண்டானதே*…. வாழ்வியல்-KSR

#*உல்லாசபூமி இங்குஉண்டானதே*…. 
———————————
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே….
துள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
பல்லாக்கிலேதேனோடை ஓரமே நீராடும் நேரமேபுல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி

தலை சாய்க்க இடமா இல்லை 
தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு, பரவாயில்லை! என்று பாடி கொண்ட என் ஜீவன ஸ்தானம்…. மறக்க முடியுமா⁉️அதுவே அமைதி, அற்புதம், ஆனந்தம் …. 

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!! நிரந்தரத்தைப் பற்றி நாம் பேசும்போது, ​​அதைச் சுற்றி நிலையான மாற்றம் இருந்தபோதிலும், அனுபவங்கள் இருந்தபோதிலும், அனைத்துவித கவலைகள், துயரங்கள் மற்றும் மிருகத்தனங்கள் இருந்தபோதிலும், இவற்றின் தொடர்ச்சியைத்தான் குறிப்பிடுகிறோம், அல்லவா? 

அழிவில்லாத ஒன்றை பற்றி, அல்லவா? 

ஒருவர் எப்படி அதை கண்டுபிடிப்பது?

சிந்தனையால், வார்த்தைகளால் அதை தேட முடியுமா நிலையற்றதன் மூலம் நிரந்தரமானதைக் கண்டுபிடிக்க முடியுமா?

மாறாததை, தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதன் மூலம் - சிந்தனையின் மூலம் - கண்டுபிடிக்க முடியுமா? 

எண்ணம், ஒரு எண்ணத்திற்கு, ஆத்மா என தன்னால் அழைக்கப்படுவதற்கு நிரந்தரத்தன்மையை அளித்து, ''இதுதான் உண்மை'' என்று சொல்லக்கூடும். சிந்தனை மாற்றத்திற்கு பயப்படுவதால், இந்த பயத்திலிருந்து அது நிரந்தரமான ஒன்றைத் உருவாக்குகிறது - மனிதர்களிடையே நிரந்தர உறவு, ஒற்றுமை, நிரந்தரமான அன்பு போன்றவற்றை. 

எண்ணம் என்பதே நிலையற்றது, மாறும் தன்மை கொண்டது; அதனால் அது நிரந்தரம் என்று கண்டுபிடித்து நம்பும் எதுவும், அதைப் போலவே, நிரந்தரமற்றது.இருந்தாலும் நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!!

சிந்தனை, வாழ்நாள் முழுவதும் ஒரு நினைவகத்தை ஒட்டிக்கொண்டு, அந்த நினைவகத்தை நிரந்தரம் என அழைக்கிறது; பின்னர் மரணத்திற்கு பிறகு அது தொடருமா என்பதை அறிய முற்படுகிறது.
சிந்தனைதான் இதை உருவாக்கி, அதற்குத் தொடர்ச்சியைக் கொடுத்து, நாளுக்கு நாள் ஊட்டம் கொடுத்து, அதைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

அது நேற்று அனுபவித்ததை, இன்று நினைவில் நிறுத்தி, அதன் மூலம்  நாளையை உருவாக்குகிறது; காலம் இதிலிருந்து பிறக்கிறது. எனவே காலத்தின் நிரந்தரத்தன்மை இருக்கிறது; உச்சகட்ட உண்மையை அடைவதற்கான ஒரு கோட்பாடுக்கு சிந்தனை அளிக்கும் நிரந்தரத்தன்மை உள்ளது. 

இவை அனைத்தும் சிந்தனையின் விளைவாகும் - பயம், காலம், உச்ச நிலையை அடைதல், அழியாத்தனமாக மாறுதல்.

ஆனால் சிந்தனையாளர் என்பவர் யார் - இந்த எண்ணங்கள் அனைத்தையும் கொண்ட சிந்தனையாளர் என்பவர் யார்?

சிந்தனையாளர் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா? 

அல்லது சிந்தனை மட்டுமே உள்ளதா - அதுதான் சிந்தனையாளரை உருவாக்குகிறதா? 

"அவரை" நிறுவிய பிறகு, நிரந்தரமானதை கண்டுபிடிக்க முயல்கிறதா -  ஆன்மாவை திறந்து பாருங்கள்.

தத்துவத்தில் கனிதல்...எனது அடர்த்தியான  லௌகீகச் சூழலில் சாத்திரமாகிறதா பார்க்க வேண்டும்...ஏகந்தம்….

இருப்பினும் வாழ்வு இருப்பு நீர் குமிழ் போன்றது…. 
••
அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பூமியில் வாழ்ந்துவிட்டேன். நன்றியற்ற துரோகங்கள் என்னை ரண படித்தி கொண்டியது இந்த மண்னின் சில ஏமாற்றும் தத்தி மனிதரால்… நான் கவலை கொள்ளவும் இல்லை. பின் நவீனத்துவம், இருத்தல்வாதம் எனக்கு மட்டும் அனுமதி வழங்கவே இல்லை.

ஐந்தில் வளையா உளத்தை வளைத்தே
    அறுபதில் வளைக்க முயல்கின்றேன். இனிநைந்து முடங்கும் உடலைப் பேணிடும்
    நல்வழி உழைப்பே அயர்கில்லேன்! 

களைப்பாக இருக்கிறது. இனி எடுத்துவைக்கும் அடிகளெல்லாம், கால்பதிக்கும் பாதையெல்லாம் மரணத்தை நோக்கியே என்று தோன்றவாரம்பித்துவிட்டது. இஃதொரு தயார்ப்படுத்தலே. 

(எங்கே படித்து கேட்டது)

ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் 'இதை அனுபவிக்க நான் உயிரோடிருப்பேனா?' என்று யோசிக்கிறேன். இந்த வீட்டை நான் திருத்துவதும்கூட முதுமையடைந்தபின் வசதியாக வாழவேண்டுமென்பதற்காகவே. அப்போது என்னால் தெளிவாகச் சிந்திக்கவியலாது. தீர்மானகரமான முடிவுகளைச் சுயமாக எடுக்கவியலாது. அழகியதோர் சூழலில்,  எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருக்கும் அமைதியான அந்திமமே நான் வேண்டுவது. எவரும் விழைவது அதையே.

உறவுகள் மீதான பிடிப்பினை உதறமுடிந்ததுபோல, மெல்ல மெல்ல யாவற்றினின்றும் விடுபட்டுப் பயணம் தொடங்குவதற்கிடையில் எதையாவது செய்துமுடிக்கவேண்டும். என்னைப் பிறருக்கு நிரூபிக்க அல்ல; என்னைச் சாந்தமுறச் செய்ய. 
I need happiness with #tranquility…..
To be a #Scholargypsy to wander here and there in this globe….

#வாழ்வியல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...