Tuesday, June 11, 2024

என்னிடம் கேட்டார் “தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வருமா? நீங்களும் ஒரு பழைய காங்கிரஸ்காரர் தானே என்கிற அடிப்படையில் இக்கேள்வியைக் கேட்கிறேன்” என்றார்!

டெல்லி JNU யுவில் 1975இல்என்னுடன் படித்து இன்று காங்கிரஸில் முக்கியப் புள்ளி நண்பரும் மற்றும் டில்லி
 பத்திரிக்கையாளரும் இன்று காலை BF இல் சந்தித்தேன்.

அவர் என்னிடம் கேட்டார் “தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வருமா? நீங்களும் ஒரு பழைய காங்கிரஸ்காரர் தானே என்கிற அடிப்படையில் இக்கேள்வியைக் கேட்கிறேன்” என்றார்!

நிச்சயமாக அப்படி காங்கிரஸ் ஆட்சி வருவதற்கு இங்கு ஒரு வழி வகையும் இல்லை!  தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் களத்தை இழந்து வெகு நாட்களாகி விட்டது. ஏன் இழந்தது என்று கேட்டால் அன்றைக்கு காங்கிரஸில் எம் பி ஆகி டெல்லி நாடாளுமன்றத்தை பிடித்தால் போதும் அங்கு  போய் உட்கார்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டார்கள். இங்கு தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருந்தது தான் காரணம். அப்போது காங்கிரஸில் இருந்த நெடுமாறன் அவர்களை முறையாகத் தலைவராக்கிப் பயன்படுத்தியிருந்தால் காங்கிரஸ் தன் களத்தை இன்று வரை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்! 

வாழப்பாடி ராமமூர்த்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்! அவருக்கும் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால்  அவரும் தன் களத்தை இழந்தார். இதுதான் எதார்த்தம். 

உங்களோடு நாங்கள் 1979 வரை காங்கிரஸில் பயணித்தோம். இந்திரா காந்தி அவர்கள் கூட நெடுமாறனை “மை டியர் சன்” என்றெல்லாம் அழைத்தார். அப்படிப்பட்டவரைத் 1979 இல் தூக்கி எறிந்தீர்கள் அல்லவா? ஆகவே தமிழ்நாட்டில் அப்படியான வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்.

ஒரு காலத்தில் நீங்கள் சத்தியமூர்த்தி காமராஜர் பெயரில் தக்க வைத்திருந்த ஓட்டு வங்கி இன்று அதிமுக திமுக பாரதிய ஜனதா கட்சி என்று மடைமாறிப் போய்விட்டது. இந்தப் புரிதல் டெல்லியில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு  ஏன்  தெரியவில்லை  என்பதுதான் ஆச்சரியம்!

#tamilnadupolitics
#TamilNaduCongress
#காங்கிரஸ்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-6-2024.


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...