Tuesday, June 11, 2024

UnionCabinet #மத்தியஅமைச்சர்அவை #PMModi

#மத்தியஅமைச்சரவையில் திருச்சூரில் இருந்து வெற்றி பெற்ற
சுரேஷ் கோபிக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்கும் என்று நினைத்தேன். அதேபோல் ஆந்திராவில் இருந்து வெற்றி பெற்ற என் டி ஆர் அவர்களின் புதல்வி புரந்தரேஸ்வரிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று நினைத்தேன். தெலுங்கு தேசத்திற்கு நான்கு இடம் ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்ததில் குறைவு தெரிகிறது!
அதேபோல் கேரளாவில் இருந்து கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த குரியன் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவர் கிறிஸ்துவ மக்களின் பிரதிநிதியாக இருப்பார் மிகுந்த அரசியல் அனுபவுள்ளவர்! எனக்கும் நன்கு தெரிந்தவர்!



அந்த வகையில்  எல்லா வட்டாரங்களையும் உள்ளடக்கித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறந்த அமைச்சரவையாகத் தெரிகிறது! தமிழகத்திலிருந்து பா ஜ க சார்பாக யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட  நிர்மலா சீத்தாராமன், ஜெயசங்கர் மற்றும் எல் முருகனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள்.

கேரளாவிற்கு இரண்டு இடம் கொடுத்துள்ளார்கள். ஆந்திராவில் புறந்தரேஸ்வரிக்கு கிடைக்கும் என்று நினைத்தது அது ஏதோ மாறுதலாகி இருக்கிறது. அவர் அம்மாநில  பா ஜ க தலைவராகப் பதவி வகிப்பார் என்றும்
தெரிகிறது. கர்நாடகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சரவையைப் பொறுத்த அளவு எந்த வட்டாரமும் புறக்கணிக்கப்படவில்லை என்பது முக்கியமானது . இப்படி எல்லா மாநிலங்களுக்கான பஞ்சாப் உட்பட பிரதிநிதித்துவம் சரியாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.  ஜம்மு-காஷ்மீர் இரண்டிற்கும் தலா ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது  உத்திரபிரதேசத்தில் போதிய அளவு வெற்றி பெறாவிட்டாலும் கூட அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது! எனக்குத் தெரிந்த மூன்று முறை  வாரணாசி மிர்ஷாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பி ஆன அனுப்பிரியா பட்டேலுக்கும்  இந்த முறையும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஏற்கனவே ராஜாங்கத் துறை மந்திரியாக இருந்தார். இம்முறையும் அதே துறை வழங்கப்பட்டிருக்கிறது. என்று நினைக்கிறேன்.

 அந்த வகையில்த் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம் பெறுகிறார்கள்!
முறையே நிர்மலா சீதாராமன் அன்னபூர்ணா தேவி இருவரும் கேபினட் அந்தஸ்து பெறுகிறார்கள்!
அனுப்பிரியா பட்டேல்’ ஷோபா கரந்தலாஜே ,ரச்சா நிகில் கட்சே, சாவித்திரி தாகுர், நிமுபென் பாமினியா, ஆகிய ஐவரும் இணை அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள்.

இந்த மத்திய நாடாளுமன்ற அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் 18 பேர் இடம் பெற்று இருப்பதோடு புதிய முகங்கள் 33 பேர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது புதிய இளம் தலைமுறைக்கான தேர்வாக இருக்கிறது.

இப்படியாகப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான இந்த அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும். ஐந்து பேர் தனி பொறுப்புள்ள அமைச்சர்களாகவும் 36 பேர்கள் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்கிறார்கள்.

இதன்படி உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 பேர்! பீகாரில் இருந்து எட்டு பேர்! மகாராஷ்டிராவில் இருந்து 6 பேர்! மத்திய பிரதேசம் குஜராத் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்தும் தலா ஐந்து பேர் அமைச்சர்களாக இடம் பெறுகிறார்கள். மேலும் ராஜஸ்தான் ஜார்கண்ட் இரண்டிலிருந்தும் தலா நான்கு பேர்! ஒடிசா ஹரியானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா மூன்று பேர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

தெலுங்கானா அஸ்ஸாம் கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் தமிழ்நாடு ஜம்மு காஷ்மீர் கோவா பஞ்சாப் உத்தரகாண்ட் இமாச்சல் அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த நாடாளுமன்ற அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். இவ்வாறு இந்திய தேசிய முழுமைக்கும் ஆன பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்  கவனமான அமைச்சரவைத் தேர்வு நடந்திருக்கிறது! கூட்டணி கட்சிகளுக்கும் இன்னும் சிலருக்கும் அதில் பங்களிக்கப்பட்டு இருப்பது மிகச் சிறந்த சமத்துவ நோக்கமாக இருக்கிறது! புதிய நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்!!

#UnionCabinet #மத்தியஅமைச்சர்அவை
#PMModi
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-6-2024.

.


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...