Sunday, June 16, 2024

#*மத்திய அமைச்சர்கள்* *ஜெய்சங்கர் தமிழரா? நிர்மலா சீதாராமனை தமிழரா*? இதை வாசியுங்கள்…

#*மத்திய அமைச்சர்கள்*
*ஜெய்சங்கர் தமிழரா? நிர்மலா சீதாராமனை தமிழரா*?   இதை வாசியுங்கள்…
————————————
நான் போட்ட பதிவை வாசித்து விட்டு
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு தமிழரா? என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்.நல்லது.

ஜெய்சங்கர் அவர்களின் தந்தையார் ஆகிய சுப்பிரமணியம் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்!
தமிழில் உரையாற்றுவார், எழுதுவார் . அக்கால அதிகார வட்டத்தில் நன்றாக அறியப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த அதிகாரி!

தான் 1970களில் எழுதிய கட்டுரைகளில் கலைஞரை மாறனைப் பாராட்டி முரசொலி சுப்ரமணியம் அவர்கள் எழுதியது எல்லாம் இவர்களுக்கு தெரியாது தான்?

முரசொலிப் பத்திரிக்கையில் ஜெயசங்கர் தந்தை சுப்பிரமணியம் அவர்களின் செயல்பாடுகள்  குறித்து கலைஞரும் மாறனும் கூட
குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள்.

அவருடைய புதல்வரான ஜெய்சங்கர் மன்மோகன் சிங் காலம் வரை வெளி விவகாரத் துறை அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்தார்!.

 அதன்பிறகு மோடி பிரதமராக வந்த போதுதான் வெளிவகாரத் துறை #அமைச்சராகஜெய்சங்கர் பொறுப்பேற்றார். இன்றும் நீடிக்கிறார். இது போக ஜெய்சங்கர் அவர்களின் இன்னொரு சகோதரர் டெல்லியில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். மேலும் ஒரு சகோதரர் வரலாற்று அறிஞராக இருக்கிறார் . இத்தகைய தமிழ் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்களைத் தமிழரா என்று கேட்பது என்ன நியாயம்!

இதுவும் போக #நிர்மலாசீதாராமனை தமிழரா? எனவும் கேட்கிறார்கள்! நிர்மலா சீதாராமன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி. மதுரை ரயில்வே காலனியில் அவரது தந்தையார் பணிபுரிந்த போது நிர்மலா சீதாராமன் அங்கே தான் பிறந்தார்! அவரது அம்மா பிறந்த ஊர் திருவெண்காடு. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களது துணைவியார் பிறந்த ஊருமாகும். பள்ளி வகுப்பை மதுரையிலும் விழப்புரத்திலும்   பட்ட படிப்பை திருச்சியில் உள்ள சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும் பயின்றவர் தான் நிர்மலா சீதாராமன். இப்படி எழுபது எண்பது வரை தமிழ்நாட்டில் படித்து விட்டு அதற்குப் பிறகு நாங்கள் டெல்லியில் படித்த J N U கல்லூரியில் பிற்காலத்தில் சேர்ந்து பயின்றார். அப்போது எங்களுக்கு வைஸ் சான்சிலராக இருந்தவர் GP திருவாளர் கோபால்சாமி பார்த்தசாரதி! அவர்தான் அமெரிக்காவில் அண்ணாவிற்கு வைத்தியம் நடந்த போது இந்தியத் தூதராக இருந்தவர் . இந்திராவை வழிநடத்திய தமிழர். 1983 இல் இலங்கை தமிழர்கள கொல்லப் பட்டு கலவர காலத்தில் அதை நிறுத்தஇவரை இந்திரா காந்தி இலங்கைக்கு அனுப்பினார்.

இத்தகையப் பின்புலத்தில்
இருந்து வந்தவர்களைப் புரிந்து கொள்ள வேண்டாமா?   குறிப்பாக நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தன் தாய் மொழியாகிய தமிழ் நன்றாகப் பேசத் தெரிவது போலவே இந்தி பேசவும் தெரியும் ஆங்கிலத்திலும்
 நன்றாக பேசுவார் அதேபோல ஜெய்சங்கர் அவர்களும் தமிழில்  பேசுவார். உண்மைகள் இப்படி இருக்க

வெறுப்பு பேச்சை வைத்துக்கொண்டு தமிழர் விரோத போக்கைக் கையாளும்  இன்றைய புதிய தலைமுறைகளுக்கு வரலாறு உள்ளிட்டு எதுவும் தெரிவதில்லை!அவர்களின் தலைவர்களுக்கும் கூட எதுவும் தெரிவதில்லை. ஒருவரை முன் வைத்து அவர்  தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் எப்படிச் செய்தார்! அவர் செய்த நற்பணிகள் என்ன? என்பதையெல்லாம் அறியாமல் அல்லது அறிந்தாலும் மறந்து விட்டு   அவர் தமிழரா? இவர் தமிழரா? என்று கேட்பதில் மட்டும் இவர்களின் வக்கனையும் வினயமும் தெரிகிறது! சரி இவர்கள் மட்டும் என்ன செய்து கிழித்தார்கள்!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-6-2024.


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...