Monday, July 29, 2024

#யாழில் மறைந்த #இரா_சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது




#யாழில் மறைந்த #இரா_சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது

ஸ்ரீலங்கா விமானப்படை விமானம் மூலம்  பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். 

கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப் பட்டது. 

ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை.

பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள்.

#திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள்,  தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று…..❓


 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...