Tuesday, July 1, 2025

#ஸ்டாலின்மந்திரிகள்ரகுபதி& #மற்றமந்திரிகள்





••••
#அதிமுகவின்_தென்மாவட்டமுன்னாள்அமைச்சர்கள் நேற்று மதுரையில் நடத்திய #முருகர்மாநாட்டில் பங்கேற்றது பற்றி திமுக உ பிக்கள் திராவிட சிகாமணிகள் கேலி செய்து பதிவு போடுகிறார்கள்.
அதெல்லாம் சரிதான் !எம் ஜி ஆர் காலத்திலேயே அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குப் போய்விட்டு வந்தாரா இல்லையா? அவர் பக்தியுடன் தானே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தார்!. ஜெயலலிதா கூட அயோத்தி ராமர் கோயிலுக்கு கரசேவகர்கள் மூலம் செங்கல்கள் அனுப்பவில்லையா?. சரி அதை விடுங்க! 1989ல் கலைஞர் ஆட்சி அமைத்து உடன், அந்த சமயத்தில் முதல் கடமையாக அவர் தனது பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு தான் போய் வழிபட்டார்!. அந்தக் குலதெய்வம் கோயிலை எடுத்து கட்டி விழாக் கொண்டாடியதும் இந்தக் குடும்பம் தான். அது மட்டுமல்ல கலைஞரின் மகள் செல்வி திருப்பதியில் படியேறிச் சென்று பெருமாள் தரிசனம் செய்துவிட்டு தான் வந்தார். கனிமொழி சிறையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்று வேண்டுதல் செய்து அவரின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடுப்பி கிடுப்பி என்று பல கோயிலுக்குப் போய் வந்தார். அதுமட்டுமல்ல இன்றைய முதல்வர் ஸ்டாலினின் துணைவியார் வீட்டில் பூஜை அறையோடு மட்டுமல்ல அவர் போகாத கோயில்அவர் பிரார்த்தனை செய்யாத வேண்டுதல் செய்யாத கோவில் என்று தமிழ்நாட்டில் ஏதுமில்லை!. அதையெல்லாம் விட ஒரு ரகசியம் சொல்கிறேன். முரசொலி மாறன் எனக்கு நெருக்கமானவர்தான்! நல்ல மனிதர் தான்.! அவரது பழைய வீட்டில் அவரது உதவியாளர் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு மேலே பிள்ளையார் படம் இருந்தது யாருக்காவது தெரியுமா?. முதலில் இதையெல்லாம் பார்த்துவிட்டு வந்து இவர்களைக் கிண்டல் செய்யுங்கள்! முதலில் உங்கள் புரட்டு வேலைகளை நிறுத்துங்கள்.!. இன்னும் எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்! எனக்குத் தெரியும்.! நான் சொல்ல விரும்பவில்லை.! அவ்வளவுதான்
இத்தனை நாள்
சிலை ஒழிப்பு மாநாடு நடத்தினீர்கள் அமைதியாக இருந்தார்கள்
சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தினீர்கள் அமைதியாக இருந்தார்கள்
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தினார்கள் அதை திராவிடம் ஊக்குவித்தது அப்போதும் அமைதியாக இருந்தார்கள்
இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்த்து வந்தீர்கள் அப்போதும் அமைதியா இருந்தார்கள்..
இந்து என்றால் திருடன் என்றார்கள் அப்போதும் அமைதியாக இருந்தார்கள்
ராமன் போட்டோவுக்கு செருப்பு மாலை போட்டார்கள் அப்போதும் அமைதியாக இருந்தார்கள்
திலகமிட்டதை நெற்றியில் என்ன இரத்தமா என்றார்கள் அப்போதும் அமைதியாக இருந்தார்கள்
ஔவையார் பாடிய விநாயகரை வடநாட்டு கடவுள் என்றீர்கள் அப்போதும் அமைதியாக இருந்தார்கள்
கோயில் சிலைகளை அசிங்கமான பொம்மைகள் என்றார்கள் அப்போதும் அமைதியாக இருந்தார்கள்..
இப்படி எல்லா தடவையும் அமைதியாக போவார்கள் என்று நினைத்தவர்களின் தலையில் நேற்று நடந்த மதுரை முருகன் மாநாடு…… கதறுங்க கதறுங்க கதறிகிட்டே இருங்க…
நீங்கதான் பழநியில் ஒரு முருகன் மாநாடு நடத்தினேர்கள்.

23-6-2025. 

 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்