#ShriPawanKalyanGaru #Tamilnadukeyissues
——————————————————————
I spoke about the ongoing 1)Katchatheevu issue and 2) the repeated arrests of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy. Their livelihood is under constant threat, and urgent diplomatic steps are needed.
3) Srilanka Eelam Tamils ethnic question
4)I also highlighted the need to link national rivers—from the Ganges to Neyyaru in Kanyakumari. I had filed a PIL in the Supreme Court and pursued it for 40 years. In 2012, the Court ruled in favour of creating a #nationalriver_linkingnetwork, which can solve water scarcity across regions.
5)The discussion also highlighted the importance of preserving the #EasternGhats, a vital ecological zone stretching from Tirunelveli, Vallanadu, Kollimalai, Javvadu Hills, and Kalrayan Hills in Tamil Nadu to parts of Andhra Pradesh, Odisha, Chhattisgarh, Bihar, and West Bengal. The Eastern Ghats, though less spoken about than the Western Ghats, are rich in biodiversity and form a crucial part of India’s natural ecosystem. It was strongly advocated that steps must be taken to protect these hills from unchecked exploitation and ensure their preservation in line with environmental guidelines.
These concerns were shared with Shri Pawan Kalyan Garu , Deputy Chief Minister of Andhra Pradesh, who responded with genuine concern and commitment. He assured that he would raise his voice to protect Tamil Nadu’s interests and work toward strengthening regional cooperation on these vital issues. His assurance was a welcome gesture in the spirit of federal unity and environmental responsibility.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் திரு #பவன்கல்யாணுடன் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பில், தமிழக முக்கிய பிரச்சனைகளை நான் எழுப்பினேன். அவர் மிகவும் கவனம் செலுத்தி கேட்டார்; தானும் இந்தக் கோரிக்கைகளை தமிழக நலன் நாடி வலியுறுத்துவதாக உறுதியளித்தார்.
1)#கச்சத்தீவு விவகாரம்,
2) #ஈழத்தமிழர்கள் சிக்கல்கள்,
3) இலங்கை கடற்படையால்
#தமிழ்நாடுமீனவர்கள் மீதான அடிக்கடி கைது மற்றும் தொந்தரவுகளை எடுத்துரைத்தேன். இது அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஒரு நிலையாக உள்ளது. இந்தச் சிக்கலை தீர்க்க, உடனடி நடவடிக்கைகள் அவசியம்.
ஏற்கனவே இது தொடர்பாக அறிக்கையும் கொடுத்து இருந்தார்.
4)#தேசியநதிகளைஇணைக்கும்திட்டத்தின் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன் – குறிப்பாக கங்கை நதியை மகாநதி , கோதவரி, கிருஷ்ணா, பாலாறு , பெண்யாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, இறுதியாக நெய்யாறு (கன்னியாகுமரி) வரை இணைக்கும் யோசனை. இதற்காக நான் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை (PIL) தாக்கல் செய்து 40 ஆண்டுகளாகப் போராடி வந்தேன். 2012ல், நீதிமன்றம் தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இது தமிழக தண்ணீர் வளத்தை அதிகரித்து நீர்நெருக்கடியை தீர்க்கும் மிக முக்கியமான தீர்வாகும்.
5)திருநெல்வேலி, வல்லநாடு, கொள்ளிமலை, ஜவ்வாது மலை, கல்ராயன் மலை வழியாக ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், மேற்கு வங்கம் வரை பரவியுள்ள #கிழக்குத்தொடர்ச்சிமலைகளை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தையும் கூறினேன். இம்மலையகம், சுற்றுச்சூழல் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்த தமிழ்நாட்டின் பிரச்சனைகளை திரு பவன் கல்யாணுடன் பகிர்ந்தபோது, அவர் தமிழ்நாட்டின் நலனுக்காக நிச்சயம் தன்னுடைய குரலை உயர்த்துவதாகவும், மாநிலங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் தன் பணி இருக்கும் என்று உறுதியளித்தார்.
No comments:
Post a Comment