—————————————-
இன்றைய மாலைப் பொழுதில் #தென்காசி, #விருதுநகர், #தூத்துக்குடி என மூன்று மாவட்டங்கள் பயன்பெறுகின்ற செண்பகவல்லி தடுப்பணைச் சீரமைப்புக் குழுவின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர்கள் என் வீட்டிற்கு வந்து என்னைச்சந்தித்தார்கள். முக்கியமாக ராமமூர்த்தி அவர்களும் சாத்தூர் கணேசனும் வந்திருந்தார்கள். ராமமூர்த்தி பழைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உமாநாத்
இ கே நாயனார் அதுபோல நல்ல சிவன் சங்கரய்யா போன்ற மூத்த தலைவர்களோடு பழகியவர் செயல்பட்டவர். மதுரை நன்மாறனுக்கும் இவருக்கும் நல்ல நட்பு உண்டு. இப்போது அந்த கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தை விட்டு விலகி வந்து செண்பகவல்லி அணைச் சீரமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோயில் கரிவலம் வந்த நல்லூர் அதாவது ராஜபாளையம் சாத்தூர் - விளாத்திகுளம் வரை உள்ள கிராமங்களை விவசாய மக்களை ஒருங்கிணைக்கிறார். அணை குறித்த ஆவணங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து சென்னையில் என்னைச் சந்தித்தார். இது சம்பந்தமான இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி கரிவலம் வந்த நல்லூரில் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அவசியம் நீங்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.அதுகுறித்த ஆவணங்களையும் என்னிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment