Tuesday, December 2, 2025

#சசிகாந்த்செந்தில்

 #சசிகாந்த்செந்தில்

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்பவர் காங்கிரஸில் சேர்ந்தார். கூட்டணியில் டெல்லி தலைமை சிபாரிசின் பேரில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.
இவர் தர்மசாலாவில் பிரச்சனையைக் கிளப்பினார். அது வேறொரு திசை நோக்கிப் போகவே இப்போது மத்திய அரசுகல்வி நிதியை ஒதுக்கவில்லை என்று உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு சிகிச்சை நல்லவிதமாக நடக்கட்டும்.
நான் இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். கடந்த 2025 மே மாதம் 18 தேதிக்கு முன்னோ பின்னோ இலங்கையில் உள்ள ஈழப் பகுதிக்கு இந்த சசிகாந்த் செந்தில் சென்றாராம். அங்குள்ள தமிழ் மீனவர்களை இந்திய அரசுக்கு எதிராகவும் இந்திய மீனவர்களுக்கு எதிராகவும் திசை திருப்பி இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை வரவேண்டும் என்று ஏதாவது பேசி தூண்டிவிட்டு வந்தாரா என்ற விவகாரம் இருக்கிறது ? அதற்கடுத்து திமுக ராஜ்யசபா எம்பிக்கள் இதே மாதிரி அங்கு சென்று பேசிவிட்டு வந்ததாகவும் தகவல் இருக்கிறது. ஒரு அடிப்படையும் இல்லாமல் பிரச்சனையைத் துவக்குங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உத்தரவாதம் சொல்லிவிட்டு வருவதற்கு இவர்கள் என்ன சர்வதேச வழக்கறிஞர்களா ?
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே சமாதானம் பேச வேண்டிய திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அதற்கு மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களைத் தூண்டிவிட்டு வருவதற்குத்தான் அங்கே சென்றார்களா? இப்படியான பேச்சு ஈழத்தில் உள்ளது. இந்த பிரச்சனை கடந்த மே மாதத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் இரு நாட்டு மீனவர்கள் இடையேயான உறவு என்னவாகும்? எந்த முறையான அணுகுமுறையும் இல்லாமல் இப்படித் தூண்டுபவர்கள் அதன் விளைவுகளை பற்றிச் சிந்திப்பார்களா? இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா என்பதையும் இது உண்மைதானா என்பதையும் தீர விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிகளில் இவர்கள் அங்கே இருந்தார்கள் என்பது உண்மையா?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்