Tuesday, December 2, 2025

#விருப்பாச்சிகோபால்நாயக்கர்

 #விருப்பாச்சிகோபால்நாயக்கர் 

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் திண்டுக்கல்–பழநிக்கு நடுவே உள்ள விருப்பாச்சி என்ற ஊரை அன்றைய நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர்.

இன்றைய திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் - பழநிக்கு செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரில் கி.பி.1725 இல் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரய்யா நாயக்கர் - காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் இவர் இயற்பெயர் (திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர்) அல்லது திருமலை கோபால சின்னய்யா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையப்பட்டுகளில் ஒன்றான விருப்பாச்சியின், 19 ஆவது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்.

கோவை தாக்குதலுக்குப் பின் கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை முற்றுகையிட்டான். விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச்சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரபட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில் கி.பி.1816 வரை சிறைவைத்தனர். கோபால்நாயக்கர் தலைக்கு அந்த காலத்திலேயே 20,000 ரூபாய் என அறிவித்தனர். பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி.1801செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபாலநாயக்கர் சமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றும் உள்ளது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்