Wednesday, December 3, 2025

#முதல்வர்ஸ்டாலினின்லண்டன்விஜயம்….

 #முதல்வர்ஸ்டாலினின்லண்டன்விஜயம்….

இந்த உலகமே மெச்சுகிறதாம். ஆமா, அகில புவணமே மற்றும் போற்றுகிறதாம் .…..
——————————————————-
முதல்வர் ஸ்டாலினின் லண்டன் விஜயம் ஊடகங்களில் மிகையாகக் காட்டப்படுகிறது. உலக தத்துவங்களை எல்லாம் படித்த ஒரு மேதை தன் முன்னோடிகளை போய் பார்த்து வருவது போல ஊடகங்கள் இந்தப் பயணத்தைப் பெரிது படுத்துகின்றன. அதாவது உலக அரசியல் தலைவர்களோடு இவரை இணை காண்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிகவும் போலியானது.ஸடாலினின் முதல் லண்டன் பயணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமானது. ஸ்டாலின் கடந்த 20 ஆண்டுகளாக லண்டன் போய்க்கொண்டு தான் இருக்கிறார் போய்விட்டும் வருகிறார். அப்படி 20 ஆண்டுகளாக போய் வந்த சமயத்தில் இல்லாத பெரிது படுத்தல் இந்தப் பயணத்தில் ஏன் நிகழ்கிறது?.குறிப்பாகக் கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆசான் காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய் பார்த்து வருகிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செல்கிறார்!அம்பேத்கர் வசித்த வீட்டைப் பார்வையிட்டு வருகிறார்!என்பதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து இதையெல்லாம் பெரிய ஆச்சரியமான செயல் போலக் காட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. முதன்முதலாக நான் தான் ஸ்டாலினை ஈழத்தமிழர் பிரச்சனைக்காக லண்டன் பாராளுமன்றத்தில் அழைத்துக் கொண்டு போய் முதன முதலாக @tamilsforum ரவி கூட்டிய கூட்டத்தில் பேச வைத்தேன்! அவர் தனிப்பட்ட முறையில் போய்வந்த போதெல்லாம் நடக்காத ஒன்று இப்பொழுது ஏன் பெரிது படுத்தப்படுகிறது. லண்டன் போகும் சுற்றுலாப் பிரயாணிகள் பொதுவாக இந்த இடங்களைப் பார்த்து விட்டு வருவது எல்லோருக்கும் வழக்கமானது தான். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் இவ்விடங்களை லண்டன் செல்லும் பொழுது இயல்பாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இப்படியான வாடகை அரங்கில் ஈழத்தமிழர் 20 ஆண்டுகள் முன்பே பங்கேற்றேன்.
லண்டனிலிருந்து M25 சாலையில் 62வது மைலில் புராதனமாக அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அல்ல.அதே பல்கலைக்கழக பன்னாட்டு கலாச்சார மையத்தின் ஒரு தனி அரங்கத்தில் அனுமதியுடன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்டின் மீது வைக்கப்பட்டு திறக்கப்பட்டதாக அங்கு உள்ள நண்பர் சொன்னார்.
அதுபோக ஏற்கனவே தமிழக அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியம் ஆர் வெங்கட்ராமன் போன்ற காங்கிரஸ்காரர்கள் எல்லாம் 1960களில் லண்டன் செல்லும் பொழுது இத்தகைய இடங்களைப் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறார்கள்.வேண்டுமானால் அவர்கள் சென்ற காலத்தில் இல்லாத அம்பேத்கர் இல்லம் மட்டுமே இப்போதைக்கு புதுப்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இயற்கையாகவே திமுககாரங்களுக்கு மூளை ஜாஸ்தி⁉️ இருக்குறதால ஜெர்மனி இங்கிலாந்து கம்பெனி தமிழ்நாட்டுலயும் இருந்தாலும் ஜெர்மனி இங்கிலாந்து போயி தான் ஒப்பந்தம் போடுவோம் என தைரியாக மழுப்பல் அற்று சொல்லி வரும் நாடக தரம் அதிகம்
விஷயம் இப்படியாக இருக்க ஏதோ ஸ்டாலின் போய் கார்ல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தது தான் உலக அதிசயம் என்பது போல பிரமிக்க வைக்கிறார்கள். உண்மையில் அவர் தகுதிக்கு இது அதிசயம் தான்.
அதற்காக இந்த ஊடகங்கள் லக்ஸ் சோப்பு விளம்பரங்களை போல இந்தக் காட்சியை திரும்பத் திரும்ப காட்டுவதன் மூலம் அதாவது உலக முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வரப் போயிருக்கும் மாவீரராகவும் அவர்வெற்றிகரமாக திரும்புவதாகவும் போஸ்டர் அடித்துக் கொண்டிருப்பது உண்மையில் மக்களை ஏமாற்றும் வேலை தான். இப்படி அரசியலில் வியாபாரம் செய்து தங்களின் சுயநலத்திற்காக அதிகாரங்களைப் பயன்படுத்திப் பெரும் செல்வங்களைக்குவித்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகள் காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய்ப் பார்த்து வருவது பெரும் முரண் நகைதான்..
இங்கு யாருக்கும் வெட்கமில்லை.
திமுகவின் ஐடி விங் மக்களிடமிருந்து ஓட்டுகளைப் பெறுவதற்காக தகுதியற்ற சில மாயைகளைக் கட்டுகிறது அதில் ஒன்றுதான் இது. 20 ஆண்டுகளாக லண்டன்போய் வந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் அப்போது நிகழாத ஒன்றை ஏன் இப்போது நிகழ்வதாகக் காட்டிக் கொள்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்.
@nsitharaman
@mkstalin
@NainarBJP
@EPSTamilNadu
@KanimozhiDMK
@Admkitwing
@BJP4India
@BJP4TamilNadu
@KTRaghavanBJP
@tskrishnan
@Nakkal_News
@dinamalarweb
@polimernews
@PttvNewsX
@TamilTheHindu
@ThanthiTV
@News18TamilNadu
@bbctamil
@timesofindia
@TimesNow
@DinamaniDaily
@vikatan
@JuniorVikatan

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்