Tuesday, December 2, 2025

#வெங்கட்ராமன்தான்பொறுப்புடிஜிபின்னு_பிழை….

 #வெங்கட்ராமன்தான்பொறுப்புடிஜிபின்னு_பிழை….

————————————————————————-
HOPF சங்கர் ஜிவால் திடீரென ரிட்டையர்டு ஆகவில்லை. அவர் ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெற போவது அரசுக்கு தெரியும். உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் வழக்கில் சொன்ன தீர்ப்பு புதிய HOPF தேர்வுக்கான அங்கிகரிக்கப்பட்டவர்களின் பட்டியலை 3 மாதம் முன்னரே UPSC க்கு அனுப்பி வைத்து அவர்கள் அனுப்புகிற 3 பேர் பட்டியலிலிருந்து ஒருவரை HOPF ஆக தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் பேனலை அனுப்பாமல் இவர்களே ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டு பொறுப்பு HOPF ஐ நியமித்துள்ளனர்.
சீமா அகர்வால், ரத்தோர், ராஜிவ்குமார், வன்னிய பெருமாள்,மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் என 8 டிஜிபிக்கள் உள்ளனர்.
இந்த 8 பேர் பேனலைத்தான் அனுப்ப வேண்டும். வேறு பெரிய வேலை இல்லை.
ஆனால் அதை 3 மாதம் முன் அனுப்பாமல் தடுத்தது யார்? ஜிவால் ஓய்வு பெறும்போது புது HOPF நியமித்தே ஆகவேண்டும் என்கிற நடைமுறை ஏன் செயல்பாட்டுக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது ப்ராசஸ் போகிறதுன்னு சொல்லியதே இந்த அரசு.
1.1990 batch Seema agarval
1992 batch
2.Rajivkumar
3.Santheep Rai Rathore
4. Vanniya perumal
1994 batch
5. Magesh Kumar agarval
6. G.Venkatraman
7. Vinith dev vankade
8. Sanjay mathur
இதற்கு பின் 1995 பேட்ச் அதிகாரிகள் ஏடிஜிபிக்களாகத்தான் உள்ளனர்
ஆனால் வெங்கட்ராமன் தான் பொறுப்பு டிஜிபின்னு ஊடகங்களில் பரப்பி தற்போது அதையே அமலுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள்.
கேட்டால் உ.பி- ஐ பார், ஜார்கண்டை பார் என சார்பு அடிமைகளை விட்டு பதிவு. உ.பி. நடைமுறையை மீறியது தவறு, அதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதையே சாக்காக வைத்து இவர்கள் முறைகேட்டுக்கும் வழி அமைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் தான் நவீன திராவிட மாடல் அரசுதானே எதற்கு உ.பி பாணியை பின்பற்றுகிறீர்கள். தவறு என்று தெரிந்தே அதை செய்யும் தைரியம் எங்கிருந்து வருகிறது?
பாஜகவை அனைத்து நிலையிலும் எதிர்ப்பவர்கள் சட்டத்தை மீறி அங்கு நடைமுறை உள்ளது என அதையே பின்பற்றுவதுதான் திராவிட மாடலா? அப்படி பார்த்தால் உ.பி கொண்டு வந்த சட்ட திருத்தத்தை இவர்கள் இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் கடுமையாக எதிர்த்துள்ளாரே, திராவிட மாடல் அரசு வசதியாக அதை மறந்து விட்டதோ.
தவறு யார் செய்தாலும் தவறுதான். அதைவிட மோசமானது அதை காரணமாக வைத்து துணிந்து தவறு செய்வது.
இவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை துச்சமாக மதித்து அரசமைப்பு சட்டம் 141 ஐ மீறுகிறார்கள்.
Article 141 – உச்சநீதிமன்ற தீர்ப்பு “law declared” ஆகும்; எல்லா coursக்கும் கட்டாயமாகும்.
Article 144 – “All authorities, civil and judicial, in the territory of India shall act in aid of the Supreme Court.”
அதனால், மாநில அரசு / காவல்துறை / நிர்வாகம் ஆகியவை உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணிக்க முடியாது.
தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்கள் Prakash Singh v. Union of India (2006) தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கொடுத்த DGP நியமன விதிகளை (UPS‌C panel, குறைந்தது 6 மாத சேவை இருப்பது, 2 ஆண்டுகள் tenure security) மீறி நடந்து வருகின்றன.
Article 141 – Law declared by Supreme Court
உச்சநீதிமன்றம் கூறிய சட்டக் கொள்கை (law declared) எல்லா High Courts, Subordinate Courts, Tribunals மற்றும் மாநில நிர்வாகத்துக்கும் கட்டாயமாகும்.
அதாவது, Prakash Singh வழக்கில் வந்த உத்தரவு Article 141-ன் கீழ் “law of the land” ஆகும்.
எனவே தமிழ்நாடு அரசு UPS‌C panel-ஐ புறக்கணித்து, Acting DGP நியமனம் செய்தது, Article 141-ஐ மீறுவதாகும்.
Article 144 – All authorities to act in aid of SC
இந்திய அரசியலமைப்பின் Article 144 இப்படி சொல்கிறது:
“All authorities, civil and judicial, in the territory of India shall act in aid of the Supreme Court.”
அதாவது, தமிழ்நாடு அரசு, காவல் துறை, நிர்வாக அதிகாரிகள் – அனைவரும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை நேரடியாக பின்பற்றும் கடமை உடையவர்கள்.
Acting DGP நியமனம் செய்வது, UPS‌C-ஐ புறக்கணிப்பது, Article 144-ஐ நேரடியாக மீறுவதாகும்.
1. Contempt of Court:
மாநிலம் உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் நடந்தால், அது contempt proceedings-க்கு வழிவகுக்கும்.
2. Rule of Law principles:
Article 141 & 144 சேர்ந்து, Rule of Law-ஐ பாதுகாக்கிறது.
மாநிலங்கள் பின்பற்றவில்லை என்றால், அது “lawlessness by the State itself” எனக் கருதப்படும்.
உச்ச நீதிமன்றம் இதை கடுமையாக பார்க்கும், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர்கள் கொடுத்த வாக்குறுதியும் அதை மீறியதும் எதிர்வினையை ஏற்படுத்தும்.
தமிழக அரசின் எண்ணம் வழக்கு தீர்ப்பு வரும்போது அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை அதுவரை நினைத்ததை சாதித்தோம் என்பதாக உள்ளது. இது மோசமான முன்னுதாரணம். அதிகாரிகளால் இந்த அரசு தவறாக வழிநடத்தப்படுகிறது என்பதற்கான உதாரணம் இந்த நிகழ்வு. இதற்காக இவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரும் நிலையும் வரலாம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்