Thursday, October 5, 2017

ஆரணிய அல்லி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகன்பெர்க், பேஸ்புக் சமுதாயத்தில் உண்டாக்கியிருக்கும் பிரிவினைகள்-பேதங்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

உண்மை தான்; நடைமுறையில் முகநூலில் ஆள் பார்த்து படிக்காமதான் விருப்புகள்-லைக் போடுறாங்க. 

ஒருவரது பதிவு(ஸ்டேடஸ்) படித்து பார்த்து கிடைப்பதல்ல அவரது ஸ்டேடஸுக்கு விழும் விருப்புகள் (லைக் )கமண்டுகள். 

பிரதி எடுத்த பதிவுகளுக்கு மூலப்பதிவு ( மூலப்பிரதி) விட அதிக லைக் ஒரு பெண்மணி போட்டால் கிடைக்கின்றது.

எனவே முகநூல் நோக்கமற்ற வகையில் இயங்கின்றது என என்னத்தோன்றுகிறது

பேஸ்புக் நல்ல முறையில் பயன்படுத்தி, அதன் நோக்கப்படி ஆரோக்கியமாக இயங்க வேண்டும்.

அதி ஜனநாயக வடிவமாய் உருவாகிய பேஸ்புக், ஏற்கெனவே நம்மிடையே இருந்துகொண்டிருந்த பிளவுகளை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. 
உறவின் இடைவெளிகளையும் கூட இன்னும் கூடுதலாகிவிட்டது
வாழ்க்கையில் அறங்கள்,இன்பங்கள், இதனால் காண அரிதாகிவிட்டன.
வன்முறைகளையும்,மனஅழுத்தங்களையும்,வன்மங்களையும் ஏற்படுத்துகின்றது.
மானிடத்தின் அக ஆசைகள், வெறுப்புகள், எதிர்வினைகள், மன அழுத்தங்களையும் களைய, இது போன்ற சமூக ஊடகம் மட்டுமே போதாது. ஜனநாயகத்தையும் சமுதாயத்தையும் எடுத்து செல்ல வேறு இலக்கிய -கலை, உறவு காரணிகள் வேண்டும் .

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-10-2017

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...