Thursday, October 12, 2017

கேட்டலோனியா

கேட்டலோனியா பிரச்சனை
________________________________________

கேட்டலோனியா தனி நாடு கோரும் பிரகடனம்:

ஸ்பெயினின் வடகிழக்கில் கேட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. தனி நாடு கோரும் பிரகடனம் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற போராடுகின்றனர்.அதன் மக்கள் தொகை 75 லட்சம். ஸ்பெயின் பொருளாதாரத்தில் கேட்டலோனியாவின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. ஆனாலும் ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக கேட்டலோனியா தனி நாடாக பிரிய முடிவெடுத்தது. ஸ்பெயின் அரசின் எதிர்ப்பை மீறி  பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில்92
சதவீதம் பேர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.ஸ்பெயின் அரசு இந்த வாக்கெடுப்பினை தடை செய்து, தனது படைகள் மூலம் ஏவிய அடக்குமுறைகளுக்கும்,வன்முறைகளுக்கும் அஞ்சாமல் கட்டலோனிய மக்கள் பொதுவாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
மறுக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையை, தானே எடுத்துக் கொள்வது என்ற கட்டலோனிய அரசின் இந்த துணிச்சலான முடிவு உலகத்தில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களுக்கு வேகத்தைக் தந்துள்ளது. இதன்அடிப்படையில்கேட்டலோனியாவை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரும் பிரகடனத்தில் அதன் தலைவர்கள் கையெழுத் திட்டனர்.

கேட்டலோனியா சுய நிர்ணய உரிமை மீதான தனது தீர்க்கமான முடிவினை உலகுக்கு சொல்லியிருக்கிற இந்த நேரத்தில் ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா தன்னாட்சி அதிகாரத்தினை பறிக்கப்போவதாகவும், பிரிந்து செல்லும் முடிவை கைவிடா விட்டால் கட்டலோனிய அதிபரை கைது செய்வோம் என்றும் ஜனநாயகமற்ற முறையில் அறிவித்திருக்கிறது.

அதேநேரம்,ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு இந்தப் பிரகடனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும்தெரிவித்துள்ளனர். இந்ததகவலைஸ்பெயின்நாடாளுமன்றத்துக்கு கேட்டலோனியா தலைவர் கார்லெஸ் புய்க்டிமான்ட் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஸ்பெயின் அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாக, பிரதமர் மரியானோ ரஜோய் தலைமையில் அமைச்சரவைவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேட்டலோனியா தனி நாடாக பிரிவதைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆயிரக்கணக்கான பார்சிலோனாவில்யுள்ளநாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியுள்ளனர். அவர்கள் தனி நாடாக அங்கீகரிக்கக் கோரும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

#கேட்டலோனியா
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
12.10.2017



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...