Saturday, October 7, 2017

ஜே.கிருஷ்ணமூர்த்தி

உளவியல் ரீதியாக, உள்முகமாக, நீங்கள் யாரையாவது சார்ந்து இருக்கிறீர்களா?
தயவுசெய்து கர்வத்திலிருந்து விடுபட எனக்கு உதவுங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
ஒருவருக்கொருவர் நம் உறவில், நான் என்னை கண்காணிக்கும்போது, நம் உறவுமுறையிலுள்ள அந்த கவனிப்பில் நான் கர்வம் உடையவன் என்று கண்டுபிடிக்கிறேன். உங்கள் உறவுகளில் நீங்கள் கர்வம் மிக்க குணத்தைக் காண்டால், அந்த கர்வ குணம் மறைந்து விடுகிறது.
எனவே, என் கர்வத்தை பற்றி சுட்டிக்காட்டுவதற்கு நான் உங்களை சார்ந்து இருக்கமாட்டேன்.
நான் ஏற்கனவே கர்வம் உடையவன் என்பதை அறிந்திருக்கிறேன்.

இது மிகவும் முக்கியமான ஒன்று.
யாரும் எனக்கு கவனிக்கும் தீவிரத்தை, அழகுணர்வை தர முடியாது என்பதை உணர்ந்தால் 
அப்போது, நான் என் சொந்த காலில் நிற்கிறேன்.

தனிமைப்படுத்துதல் போல அல்ல நான் கூறுவது.
பின்னர் நான் கண்டுபிடிக்க வேலை செய்யதாக வேண்டும் என்ற பொறுப்பு என் கையில் உள்ளது.
அதன் பிறகு அவ்வேலை செய்யும்போதே அதற்கான தீவிரத்தை நான் பெறுகிறேன்.
நான் வளர்ந்துவந்த பாரம்பரியத்தை நிராகரிக்கும்போது; மற்றவரை சார்ந்து இருந்த அந்த
பாரம்பரியத்தை நிராகரிக்கும்போது, ஒன்று, நான் வேலை செய்தாக வேண்டும். வீணாக சோர்ந்து
போகாமல் நான் நிராகரித்திருந்தால், நான் ஏற்கனவே ஆற்றல், தீவிரம் ஆகியவற்றைப் பெற்றிருப்பேன்.

ஆகவே, நான் யாரையும் சார்ந்து இருக்கமாட்டேன்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி
#JKrishnamurti - Tamil
- Challange of Change

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh