Tuesday, November 28, 2017

இந்தியா-இலங்கை ஒப்பந்தம்- பிரபாகரன்

அடாவடித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்ட ஜே.என.தீட்ஷித், ரௌத்தரத்தை காட்டாமல் பொறுமையோடு அமைதி காத்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.
————————————————-
இன்றைய(28-11-2017) ஆங்கில இந்து ஏட்டில் இந்திய - இல்லகையிடையே ராஜீவ் காலத்தில் 1987 இல் நடந்த ஒப்பந்தத்தை ஒட்டிய செய்திகளை அதன் செய்தியாளர் பி.கோலப்பன் எழுதியுள்ளார். 

அந்த சமயத்தில் இதை நேரடியாக பார்த்தவன் என்ற நிலையில், அன்றைய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரியாக இருந்த ஜே.என.தீட்ஷித் குறித்தான செய்திகள். அப்போது விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் யாருக்கும் தெரியாமல் டில்லியில் ஹோட்டல் அசோகாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். சூழ்நிலைக் கைதியாக இருந்த பிரபாகரனின் தவிப்பும், கையறு நிலையும் யாரோடும் தொடர்பு கொள்ளாத நிலை அந்த நேரத்தில்  இருந்தது. 

பிரபாகரன் இந்திய அரசின் தயவில் இருக்க கூடாதென்று உணவும் தண்ணீரும் கூட அந்த விடுதியில் உட்கொள்ளவில்லை. அசோகா ஹோட்டலில் பிரபாகரனை தீட்ஷித் சந்தித்தார். அப்போது கண்ணியமற்ற முறையில் பிரபாகரனிடம் தீட்ஷித் நடந்து கொண்டார். 

அவர் புகைக்கும் பைப்பில் புகையிலையை உருட்டிக் கொண்டே இது மாதிரி உன்னை உருட்டி அழித்து விடுவேன் . ஜாக்கிரதை. ஒழுங்காக ராஜீவ் - ஜெயவர்த்தனே கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள். இல்லையென்றால் உங்கள் இயக்கத்தையும் ஓழித்துவிடுவோம். விளைவுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருக்கும் என்று ஹிட்லர் பாணியில் பேசியது இதுவரை வெளியுலகுக்கு சரியாக தெரியவில்லை. 

பிரபாகரன் அமைதியாக இருந்துவிட்டு இலங்கைக்கு சென்று யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் திடலில் 
 ்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்று தெளிவாக உலகத்திற்க்குஎடுத்துயுரைத்தார்.

இத்தனைக்கும் அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் தான் அங்கே கைதியை போன்று அங்கு அழைத்து செல்லப்பட்டார். எந்தவித தயக்கமும் பயமும் இல்லாமல் தமிழருக்கு எதிரான இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்று உலக சமுதாயத்திற்கு கூறினார். 

அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும்,
என்னுடைய (நெடுமாறனின் தமிழ்நாடு காங்கிரஸ்(கா)பொதுச்செயலாளர்அடியேனும் ) தலைமையில் இந்த ஒப்பந்தத்தை நேப்பியர் பூங்கா அருகே யுள்ள பெரியார் சிலை அருகில் 04-08-1987ம் தேதி  கொளுத்தினோம். இந்த செய்திகள் எல்லாம் கோலப்பன் பத்தியில் இல்லாததால் இதை பதிவு செய்கிறேன். இதுகுறித்து விரைவாக என்னுடைய நினைவுத் தொகுப்புகளில் வெளிவர இருக்கிறது. 

பிரபாகரன் எனக்கு சாப்பாடு பரிமாறினார், சட்டை போட்டுவிட்டார் என்று சொல்லும் திடீர் நபர்களுக்கெல்லாம் இதெல்லாம் தெரியாது. இது 1987இல் நடந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கால சக்கரங்கள் ஓடி விட்டன.உழைத்தவர்கள், களப்பணியாற்றிவர்கள் எல்லாம் ஓரமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இது தான் இன்றைய அரசியலின் கேடு கெட்ட நிலை.....
திடீர் பேர்வழிகள் நாட்டுக்கு நியாயமும், கருத்துகளையும் போதிக்கிறார்கள். என்ன சொல்ல.

#இந்தியாஇலங்கைஒப்பந்தம்1987
#ஈழம்
#பிரபாகரன்
#தீட்ஷித், 
#indiasrilankaaccord1987
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
28-11-2017

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...