Friday, November 10, 2017

தமிழகத்தின் அவமானம்

இன்று பீனிக்ஸ் மாலில் உள்ள புக்மார்ட் ஸ்டார் மார்க்கு(Star Mark)வழக்கம் போல் சென்று இருந்தேன். இன்றும் அவ்வாறு சென்று போது நண்பர் ஒருவரை சந்தித்தேன். அதாவது அவர் திரைப்படம் பார்க்க சசிகலாவுக்கு உரிமையானது என சொல்லப்படும் ஜாஸ் சினிமாஸ் திரையரங்கத்தில் ரிசர்வ் செய்து படம்பார்க்க வந்ததாகவும் ஆனால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்தார். அதாவது அங்கு வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேசும் போது ," மோடி பழி வாங்குகின்றார்" என கூறினார். அவரிடம் எதுவும் பதில் சொல்ல விரும்பவில்லை.
1991 முதல் 2016 அதாவது 26 வருட வாழ்வில் இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஒரு பைசாவாவது நியாயமான முறையில் சம்பாத்தியா? அல்லது அரசியல்வாதிக்கு உதவியாளர்கள் என கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுற தெய்வம் கொட்டியவைகளா? பழி வாங்குவதாக சொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். மத்திய அரசின் இயந்திரத்தை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனக் கூறியிருந்தால் அதில் நியாயம் இருக்கும்.
இதோ இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் குமரி அனந்தன். ஏறத்தாழ 56 வருடங்கள் அரசியலில் இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் தலைவராக , நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக பணி செய்தவர். அவரது பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றார் என்பது புரிகின்றதா? தனது ஓய்வூதிய தொகையில் தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்கின்றார். 47வருட அரசியல் வாழ்வில் நான் சொத்துக்களை விற்று கடனாளியாக இருக்கின்றேன். ஆனால் 26 வருடம் பினாமியாக இருந்து சொத்து சேர்த்தது தவறில்லை ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டும் பழி வாங்குதல் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் உட்பட வணிக வளாகம் மிரட்டி வாங்கப்பட்டதை தலைவர் கலைஞர் ஏற்கனவே கண்டித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை அபகரித்த ஒருவரின் பின்னால் பெரும்பான்மை மக்கள் இருக்கின்றார் என்பதால் இவர்கள் நியாயமானவர்கள் ஆகிவிடமுடியுமா? அவர்கள்1980களில் என்ன நிலையில் 
இருந்தனர். 1991யிலிருந்து எப்படி இவ்வளவு சொத்து இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என அன்றைய ஆளுநரிடம் பலர் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு மனுக்கள் வழங்கினர்.
அப்படிப்பட்டவர்களை பழி வாங்கவோ சோதனை என்பது அர்த்தமற்றது.
தமிழகமே அன்று இவர்கள் மீது கடுமையான வைத்த குற்றச்சாட்டுகள்
யாவும் மறந்து விட்டத? உச்ச நீதி மன்றம் 
தண்டனை வழங்கியும் விட்டது. பிறகு 
பழிவாங்க என சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

அண்ணாமலை நகர் பத்மினி, சந்திரலேகா மீது திரவக வீச்சு, வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகம் சுந்தரம் என பலர் பட்ட அவதிகள் மறக்க முடியுமா?
நாடி நரம்பு ரத்தம் சதை மூளை எலும்பு இப்படி மொத்தத்திலும் ஊழல் ஊறிப்போன ஒருத்தரலாதான் இவ்ளோ சொத்துக்களை ஊழல் செய்து குவிக்க முடியும்.
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
10-11-2017

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...