Monday, November 27, 2017

பொருளாதாரம்

நரசிம்மராவ் பிரதமர்,மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த 1992 காலக்கட்டத்தில்; புதிய பொருளாதார திட்டத்தினால் உலக மயமாக்கல் என்ற நிலையில் கலப்பு பொருளாதாரம், காந்தியின் கிராமிய பொருளாதாரம், கிராம ராஜ்ஜியம், கூட்டுறவு முறை, மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. 

கிராமிய பொருளாதாரத்திற்கு குரல் கொடுத்த உத்தமர் காந்தி, வினோபாவே, ஜே.சி.குமரப்பா, அச்சுத பட்டவர்த்தன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சௌத்ரி சரண்சிங், மோகன் தாரியா, சர்வோதய ஜெகந்நாதன் வரையிலான ஆளுமைகள் ஆற்றிய களப்பணிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. மக்கள் நல திட்டங்களையே புதிய பொருளாதாரம் ஒழித்துவிட்டது. 

புதிய பொருளாதார திட்டங்கள் வேறு திசையில் பயணித்து, காலப்போக்கில் நம்முடைய மண்வாசனையான விவசாயமும், சிறுதொழிலும், குடிசைத் தொழிலும், நம்முடைய மரபு ரீதியான பணப்பரிவர்த்தனைகள் யாவும் தொலைந்து போகுமோ என்ற கவலை ஒவ்வொரு நாளும் வாட்டுகிறது. இதற்கு யார் காரணம்? நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மட்டுமே. 

இக்கோலத்தையும் நமது பண்பாட்டு ரீதியான பழக்க வழக்கங்களை மாற்றிய இவர்களை இன்னும் போலியான நியாயங்கள் நேரத்திற்கு ஏற்ற வாறு
பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...