Thursday, February 8, 2018

*குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் உலக மக்கள்*


-------------------------------------

தென் ஆப்பிரிக்கத் தலைநகரங்களில் கேப் டவுன் ஒரு பெரிய நகரம். அங்கு தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. 40 லட்சம் மக்கள் வசிக்கும் ஒரு பெரு நகரில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். நீண்ட வரிசையில் நின்று ரேசன் பொருட்களைப் போல தண்ணீரை பெற்றுச் செல்கின்றனர். ஈரான், சோமாலியா, மெக்சிகோ, இந்தோனேசியாவில் குறிப்பாக ஜகார்த்தாவில் குடிநீர் பஞ்சங்கள் அலைமோதுகின்றன.

கேப் டவுனில் ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் 50 லிட்டர் நீரை மட்டும் பயன்படுத்தலாம் என அந்த ஆட்சி அதிகாரம் சொல்கின்றது. அரசு ஊழியர்கள் மூலம் குடிநீர் குறித்தான எச்சரிக்கைகள் ஒலிப் பெருக்கி மூலம் தெருக்களில் செய்யப்படுகிறது. ஐ.நா. மன்றம் 2010 இல் பன்னாட்டு உடன்பாட்டின் கீழ் குடிநீர் உரிமையை ஒவ்வொரு அரசாங்கமும் உறுதிபடுத்தி வழங்கவேண்டுமென்று உறுப்பு நாடுகள் அனைத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

கேப் டவுன், ஈரான், சோமாலியா, மெக்சிகோ, இந்தோனேசியாவில் குறிப்பாக ஜகார்த்தா போன்ற இடங்களில் அவசரக் குடிநீர் மையங்கள் இருந்தாலும் அந்த மையங்களில் தண்ணீர் வழங்க நீர் இல்லை.

*இந்நிலையில், கேப் டவுன் அருகிலுள்ள கிரபவ் நகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. தங்களது உபரிநீரான 1,000 கோடி லிட்டர் நீரை கேப் டவுனுக்கு அளித்து உதவியுள்ளது. வெஸ்டர்ன் கேப் மாகாணம், தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு முனையில் கடற் கரையோரமாக அமைந்திருக்கிறது. *

இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றோம். உலக மக்கள் தொகையில் 16%, ஆனால் உலக நீர்வள ஆதாரங்களில் 4% மட்டுமே இருக்கின்றது. இந்தியாவில் நீர்வளம் நிலையும், வாய்ப்புகளும் என்ற யூனிசெப்பின் 2013 அறிக்கையில், சில பிரச்சனைகளையும், நாம் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் தெளிவாக சொல்லியுள்ளது. இதற்கு தான் இதை குறிப்பிட்டு எனது நதிநீர் இணைப்பு வழக்கில் தெளிவான ஆதாரங்களோடு உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு கொண்டு சென்றேன். ஆனால் நீராதாரங்களை பாதுகாக்கவும், அதை முறைப்படியாக பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வோ, கவன உணர்ச்சியோ இல்லை. மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, திட்டமிட்டு நீரை பயன்படுத்தல் என்பது முக்கியமான விசயங்களாகும். எதிர்காலத்தில் நீர்ப் பற்றாக்குறையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது பெரிய கேள்விக்குறி.

#குடிநீர்
#நீர்வளம்
#Water_Resources
#Drinking_Water
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...