Tuesday, February 27, 2018

*காவிரி *காவிரி பிரச்சனையின் நியாயத்தை உணராத முரட்டு ஜென்மம் முன்னாள் பிரதமர் தேவேகவுடா.*

-------------------------------------
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாதென்றும் திருவாய் மலர்ந்துள்ளார் முரட்டு பிடிவாதக்காரர் *முன்னாள் பிரதமர் தேவேகவுடா*. 

தேவேகவுடா, காவிரிப் பிரச்சினையில் 1995 வாக்கில்  தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு எதற்கென்றால், நடுவர்மன்ற தலைவர் நீதிபதி *சித்த கோஷ் முகர்ஜி* தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஆய்வு நடத்தும் போது அவருக்கு தஞ்சை மாவட்ட கோவில்களில் பூர்ண கும்ப மரியாதையும், பரிவட்டமும் சூட்டினார்கள் என்ற நிலையில் அவரிடம் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்காதென்று வீண் ஒப்பாரி வைத்து ஒரு அவசியமற்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 1996இல் பிரதமர் பொறுப்பையும் ஏற்றார். இந்தியப் பிரதமராக உறுதிமொழி எடுத்த தேவேகவுடா தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை எதிர்ப்பிரதிவாதிகளாக சேர்த்தவர். இந்தியப் பிரதமராக எப்படி உறுதிமொழி எடுக்க முடியும்? இது அரசியலமைப்புச் சாசனத்திற்கு விரோதமானது. 

இந்நிலையில்,நான் அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவேகவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என *Quo Warranto* ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஏன் என்றால் தமிழகத்தினையும் கேரளத்தையும்,புதுவையை  எதிரிகளாக பாவிக்கும் ஒரு நபர் எப்படி இந்திய பிரதமராக இருக்க முடியும் என்ற வினாவை என்னுடைய ரிட் மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவேகவுடாவுக்கும், மத்திய அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பினார். 

இதை அறிந்தவுடன் அலறியடித்து பிரதமர் தேவேகவுடா நிலுவையில் இருந்த தனது மனுவை பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் இருந்து உடனே திரும்பப் பெற்றார்.

தேவேகவுடாவை 1996 டிசம்பரில்,உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் எல்லாம் ஒரு மனிதரா என்று நினைக்கத் தோன்றியது. என்னை நீக்கச் சொல்லி வழக்கு போட்டவர் நீங்கதானே என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார். 

மென்மையும், அடிப்படை நாகரிகமும் தெரியாதவர் ஒரு பிரதமராக உயர்ந்தார் என்ன செய்ய? 

மாநிலத் தலைமைச் செயலராக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வு வட்டாட்சியர் போல நடந்து கொள்கின்ற பாணி தான் இவர் பாணி. அடிப்படை மனிதநேய குணங்கள் இல்லாத மனிதரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 

காவிரிப் பிரச்சனையில் ஒரு கட்சித் தலைவராகவோ, ஒரு முன்னாள் பிரதமராகவோ நடந்து கொள்கின்ற பாங்கு இல்லாமல் தரமற்ற முறையில் நடந்து கொள்கிறார். 

இந்திய கூட்டாட்சியில் ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் பிரதமர், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். 

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற *தலைமை நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமைய்யா*, தன்னுடைய கர்நாடக மாநில நலனுக்காக தமிழகத்திற்கு காவிரித் தண்ணீரை வழங்கக் கூடாதென்று கர்நாடக அனைத்துக் கட்சித் தலைவர்களோடு அன்றையப் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தவர் தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இது தகுமா?. 

தேவேகவுடா முன்னாள் பிரதமர் என்ற அனைத்து சலுகைகளை பெற்றுக் கொண்டு கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜன் நடந்து கொள்வதைப் போன்று நடந்து கொண்டால் மத்திய அரசு தரும் சலுகைகளை பறித்து, திரும்ப பெற்றுக் கொள்வதில் நியாயங்கள் இருக்கின்றன.

#காவிரிப்_பிரச்சனை
#உச்சநீதிமன்றத்_தீர்ப்பு
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#தேவேகவுடா
#Deve_gowda
#Cauvery_Issue
#Supreme_Court_of_India_Judgement
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-02-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...