Monday, February 25, 2019

இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

எவரும் அறிவுரைகள், ஆலோசனைகளைவிட தங்களை முழுமையாக புரிந்துக் கொண்டு செயல்படுபவரால் தான் நல்வினையை ஆற்ற முடியும்.

போதனைகளை புரிந்து கொள்ள நாம் இங்கு இல்லை. நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பிம்பத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல உங்களை நீங்களே சீர்தூக்கி பார்த்து புரிதலடைந்துவிட்டால் பிம்பம் காட்டும் நிலைக்கண்ணாடி கூட அவசியமற்றதாகிவிடும். அந்த அளவில் நமக்கு நாமே என்ற நிலையில் நல்லது கெட்டதை பிரித்தறிந்தாலே ஆரோக்கிய வாழ்வை நோக்கி நாம் நகரலாம்.
---
ஒருவருக்கு பாராட்டுகளைவிட நினைவில் கொள்ளும் அவமானங்களே பால பாடங்களாக அமைந்து பாதுகாக்கிறது. உதட்டளவில் பாராட்டுக்கள் என்பது வெறும் வெற்று வார்த்தைகள் தான். நமக்கு ஏற்படுகின்ற அவமானங்கள் நம்மிடையே ஊடுருவி சிந்திக்கத் தோன்றுகிறது. 
---
நமது வாழ்வில் ஏராளமான மனிதர்களை கடக்கின்றோம். பல மனிதர்களுக்கு உதவுகின்றோம். துணையாக இருக்கின்றோம். ஏணியாக இருக்கின்றோம். ஆனால், அந்த உள்ளார்ந்த நோக்கத்தை அந்த மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. நம்முடைய பணி அவர்களுக்கு பயனாகிறது. அந்த பணி அவர்களுக்கு முடிந்தவுடன் நம்மை அழுக்கு துடைக்கும் நாப்கின் தாள்களை போல துடைத்துவிட்டு எறிபவர்களிடம் என்ன நியாயம் எதிர்ப்பார்க்க முடியும். எனவே நாம் நாமாகவே இருக்க வேண்டும். நமக்காக பொதுநலத்தோடு சிந்திப்பது தான் சாலச் சிறந்தது.

ஒருவன் தன்னுடைய இயல்பான சிந்தனைகளை வெளிப்படுத்தவில்லை என்றால் அவன் அடுத்தவர்களுக்கு அடிமை தான். உலகோடு ஒட்டி வாழவேண்டும் என்பது நியாயம். அதேபோல, தனக்கு எதிர்காலத்தில் வரும் சிக்கல்களை அறிந்து தனித்தும் வாழ வேண்டும்.
---
எவரும் எவருக்காகவும் இருக்கவோ, இறக்கவோ முடியாது. பூமிப்பந்தில் இருக்கின்ற காலத்தில் அமைந்த வாழ்க்கையும், கிடைத்த வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்துவதே மானிடம். 

#ksr_postings #k_s_radhakrishnan_postings கே.எஸ். இராதாகிருஷ்ணன் 25.02.2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...