Sunday, February 3, 2019

David Montero’s Kickback. உலகளவில் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழல்கள்.


David Montero’s Kickback. உலகளவில் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழல்கள்.

டேவிட் மாண்டெரோ எழுதிய கிக்பேக் எனும் ஆங்கில நூல் உலகளவில் மக்களை ஏமாற்றி ஊழல் செய்வதை ஆதாரத்தோடு வெளிப்படுத்துகிறது. உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை லஞ்சமாக தங்களது வியாபார லாபத்திற்காக பெருக்கிக் கொள்ள தாராளமாக பணத்தை அள்ளி வீசுகிறது. இதை ரோக் (rogue) கம்பெனிகள் என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரமமில்லாமல் பின்தங்கிய அரசியல் ஆட்சியில் உள்ள ஆப்பிரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் போக்கிரித்தனமாக அள்ளி வழங்குகிறது என்று இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது. இதனால் வறுமை, சட்ட ஒழுங்குசீர்கேடு ஏற்படும். இந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக நைஜீரியா, பஹரைன், கோஸ்டாரிகா, கிரீஸ் போன்ற பல நாடுகளில் பொருளதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரலாற்று ரீதியாக Kickback  என்பது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்த அவலத்தை முதன்முதலாக தொடங்கியது என்று ம் இந்தநூலில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயகமா? சந்தை ஜனநாயகமா என்று கேள்வி கேட்கும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் ஆர்வமுள்ளவர்கள் படித்தால் பல தரவுகள் கிடைக்கும்.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
03-02-2019




No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...