Friday, February 1, 2019

(பாஞ்சாலி சபதம்)

கண்ணைப் பறிக்கும் அழகுடை
யார் இளமங்கையர் - பல
காமரு பொன்மணிப் பூண்கள்
அணிந்தவர் தம்மையே
மண்ணைப் புரக்கும் புரவலர்
தாம் அந்த வேள்வியில் - கொண்டு
வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்க்கே, எங்கள் மாமனே!
எண்ணைப் பழிக்கும் தொகையுடை
யார் இளமஞ்சரைப் - பலர்
ஈந்தனர் மன்னரிவர் தமக்
குத் தொண்டியற்றவே
விண்ணைப் பிளக்கும் தொனியுடைச்
சங்குகள் ஊதினார் - தெய்வ
வேதியர் மந்திரத்தோடு பல்
வாழ்த்துகள் ஓதினார்.

- பாரதி (பாஞ்சாலி சபதம்)
காமரு - மிக விரும்பத் தகுந்த
புரக்கும் புரவலர் - ஆளும் மன்னர்கள்
இளமஞ்சர் - இளம் ஆண்கள் அதாவது வாலிபர்கள்

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...