Wednesday, February 6, 2019

விவசாயிகளை அழிக்கும் மக்காச்சோள புழுக்கள்


*விவசாயிகளை அழிக்கும் மக்காச்சோள புழுக்கள்*
------------------------------------------
மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள தயாராகி விட்டனர். இந்த ஆண்டு புதிதாக ஒரு குழு இளம் குருத்துகளை தின்று நாசம் செய்து வருகின்றது. இதற்கு சரியான மருந்து வேளாண்மை துறையினரால் பரிந்துரைக்கப்படவில்லை. மருந்து கடைக்காரர்கள் கூறும் மருந்துகளை மாறி மாறி அடித்து மனம் நொந்து வேதனையில் மூழ்கியுள்ளார். கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன் கோவில் விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.இங்கு மட்டும் அல்ல,
தமிழகம் எங்கும் இந்த நிலைதான்.....

இது அமெரிக்காவின் சதி என ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் வந்துகொண்டிருக்கிறது. மானாவாரியாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், கிணற்றுப்பாசனமாக திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். உரம், விதை எல்லாமே கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். 
Image may contain: plant, sky, grass, cloud, outdoor and nature
இந்த முறை பயிர் விளையவில்லை என்றால் அவ்வளவுதான். விவசாயிகள் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் வேதனை நிலவுகிறது. இந்த புழுக்கள் ஒரு நிலத்தில் தென்பட்டால் ஒரு வார காலத்தில் நிலம் முழுவதும் வேகமாக பரவுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தப் புழு இந்தியப் புழுவா? இல்லை அமெரிக்க புழுவா?. அமெரிக்காவில் காணப்பட்ட இப்புழு போன வருடம் கர்நாடக மாநிலத்தில் வந்தது. 

இதுவரை யாரும் எதிர்த்து கேள்வி கேட்டதாக தெரியவில்லை. விவசாயத் துறையினரும், புலனாய்வு துறையினரும் எந்த விசாரணையும் நடத்த தயாராக இல்லை. அது தொடர்பான அறிவு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இல்லை. இது அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு எப்படி வந்தது? இந்தியாவின் மரபுசார் விவசாயத்தை மாண் சாண்டோ போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் கெடுத்து வருகின்றது. இது ஊரறிந்த ரகசியம். 

அத்துடன் பயிர்களுக்கு இல்லாத நோய்களை விதைகளின் மூலம் மற்ற சதிவேலைகளில் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விடுகிறது. இதனால் பூச்சிக்கொல்லிகளை பல லட்சம் கோடிகளுக்கு விற்பனை செய்யலாம். இந்திய விலை பொருட்களின் தரத்தை குறைக்கலாம். அதன் மூலம் நோய்களுக்கு மருந்து பொருட்களை இறக்குமதி செய்யலாம்.

நாட்டையே பஞ்ச சூழ் நிலைக்கு இட்டுச் செல்லலாம். இந்த குழுக்களை உருவாக்க கூடிய முட்டைகளை பரப்பியது. இதனை உடனே இந்திய அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும். ஆகாயத்தாமரை, சீமைக் கருவேலம், பார்த்தீனியம் போன்றவற்றிற்கு விடை தெரியாத நிலையில் இப்போது படைபுழுக்கள், மக்காச்சோள பயிரை மட்டும் தாக்கி அழிக்குமா? அல்லது மற்ற பயிர்களையும் நாசம் செய்யுமா? என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் விவசாயிகளை எப்படி காப்பாற்றுவது?

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-02-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...