Sunday, April 14, 2019

இன்று (13.04.2019) நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் - தூத்துக்குடி.

இன்று (13.04.2019) இரவுவரை #தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட #கோவில்பட்டி, #விளாத்திகுளம் தொகுதிகளின் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கடந்த 25 நாட்களில் மக்களைச் சந்தித்து கழகவேட்பாளர்களுக்கு,#கனிமொழிஜெயகுமார் ஆதரவு திரட்டும் பணியை முழுவதும் நிறைவாக்கினோம். திரும்பவும் வாய்ப்பிருந்தால் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அடுத்து நாளை முதல் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பணிகள் உள்ளன.

காலை முதல் புதூர் ஒன்றியத்தில் சிவலார்பட்டி, மேலக்குமார சங்கனாபுரம், தவசிலிங்கபுரம் , கம்பத்துப்பட்டி கோவில்பட்டிக்குட்பட்ட மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், நடுக்காட்டூர், முத்தம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, மாதாளபுரம்,
எம்.துரைசாமி புரம்,புது சின்னையாபுரம், மற்றும் எட்டையபுரம் பகுதியைச் சார்ந்த வடக்கு செம்பபுதூர்,தெற்கு செம்பபுதூர், கசவன் குன்று, டி.சண்முகபுரம்சோழாபுரம் ஆகிய கிராமங்களில் கழக வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினோம்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை,டி.ஆர் .குமார்,வழக்கறிஞர்.குரு செல்லப்பா, சீனிவாசன், சத்திரப்பட்டி ஜெயராமன்,சீனிவாசன்,மறைந்த கலைஞரின் பாதுகாவலர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாண்டியன், கோவிந்தராஜ், கந்தவேலு ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மேலும் தங்கவேலு சி.பி.ஐ, அழகுமுத்து சி.பி.எம், கழக இலக்கிய பகுத்தறிவுப் பேரவை எ.ராஜேந்திரன் இந்தச் சுற்றுப் பயணத்தை ஒழுங்குபடுத்தினார்.
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் கள நிலவரம் குறித்து எங்களுக்கு தெரிவித்தார்.

இன்றுடன் கோவில்பட்டி., விளாத்தி குளம் தேர்தல் பணிகளை நல்லபடியாக நிறைவு செய்ததில் மன நிறைவடைகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-04-2019
Image may contain: one or more people, people standing, people walking and wedding

Image may contain: 5 people, people smiling, people standing and outdoor

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...