Sunday, April 28, 2019

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் #வாழை ஒரு முக்கிய பயிராகும்.



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்#வாழை ஒரு முக்கிய பயிராகும். சமீபத்தில் பெய்த மழையாலும், காற்றாலும் வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்துவிட்டன. மே-ஜூன் மாதங்களில் வாழைக்கன்றுகளை ஊன்றி அடுத்த வருடம் மார்ச் மாதம் வாழைத்தார் ஆக வளர்ந்துவிடும். இரண்டு, மூன்று வாழைக்கன்றுகள் முளைத்துவிடும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை தார் ரூபாய் 25 க்கு அதிகப்படியாக கொள்முதல் செய்யப்படும், குறைந்த விலை ரூபாய் 11 க்கும் வீழ்ச்சியடைந்ததும் உண்டு, எட்டு ரூபாய் விலையிலும் விற்று வந்த விவசாயிகள் நஷ்டப்பட்டது உண்டு. இங்கிருந்து கேரளாவுக்கு அதிகமாக வாழைத்தார்கள் விற்பனைக்கு செல்கின்றன. 
இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம் அடைந்து விளைச்சலுக்கு வராமல் காய்ந்தது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாகும். ஒரு ஏக்கருக்கு வாழை பயிரிட ஒரு லட்சம் வரை செலவாகும். இந்நிலையில் இன்சூரன்ஸ், பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கைகொடுப்பதில்லை. என்ன செய்ய? வாழைப் பழ விற்பனை கடைகள் தான் இருக்கிறது. ஒழிய பெரிய சந்தை இந்த இரண்டு மாவட்டத்திலும் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019
Image may contain: plant, tree, outdoor and nature

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...