Wednesday, June 19, 2019

#நாடாளுமன்ற_உறுப்பினர்கள்_உறுதிமொழி

————————————————-
நேற்றும், நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தார்கள். நேற்றைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி முன்எடுக்க, தமிழகம், புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழில் உறுதிமொழி எடுத்தார்கள். இது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.
தமிழுக்கும் அமுதென்று பேர்..,
அந்தத் தமிழ்., இன்பத் தமிழ்.., 
எங்கள் உயிருக்கு நேர்..

கல் தோன்றி, மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய
மூத்த குடி தமிழ்பெருங்குடி........
என்ற சூழலில்
தமிழின் தொன்மையையும், தமிழர்களுடைய வளர்ச்சிக்கும், உரிமைகளை மீட்டெக்கவும் இதுவொரு நல்ல முன்னெடுப்பு. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சராங்கள் கொண்ட இந்தியாவில் *பன்மையில் ஒருமை* என்ற நிலையில் வட்டார மொழிகளையும், பிராந்திய அபிலாஷைகளையும், நிலைநிறுத்த வேண்டியது அவசியமான கடமைகளாகும். *வேற்றுமையில் ஒற்றுமை* என்பது இந்திய ஒருமைப்பாட்டின் அடிப்படையாகும் . அந்த அளவில் பல்வேறு மாநிலத்தை சார்ந்த பல உறுப்பினர்கள் தங்களுடைய தாய்மொழியில் உறுதிமொழியை எடுத்திருப்பதால் தேசிய இனங்கள் ஒற்றுமையோடு ஒரே நேர்கோட்டில் பயணிக்க தேசிய அளவில் பயணிக்க ஒரு அச்சாரம். தமிழகத்தை தவிர்த்து இந்தி மொழி தவிர பிற பல்வேறு மாநிலங்களின் தாய்மொழியில் உறுதிமொழி எடுத்தவர்களின் பட்டியல் வருமாறு.
நூறுகோடி முகமுடையாள்..
செப்புமொழி பல உடையாள்..
இந்தியாவின் பன்முகத் தன்மையை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
•பிஜேபி சதான்ந்த கெளடா & பிரகலாட் ஜோஷிஇருவரும் கன்னட மொழியில்.
•மத்திய அமைச்சர் ஹரிசிம்ரன் கவுர் பாதல் – பஞ்சாபி மொழியில்.
•மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பட் சாவந்த் &
•ராவ்சாகிப் படில் டன்பெ இருவரும் – மராத்தி மொழியில்.
•ஜிதேந்திர சிங்க் – பிஜேபி – டோங்க்ரி மொழியில்.
•பீகார் கோபால் ஜி தாகுர் & அசோக்குமார் யாதாவ் – மைதிலி மொழியில்.
•பிஜீ ஜனதாதளம் ஒரியாவிலும்.
•காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும் பிஜேபி வேட்பாளர் பாபுல் சுப்ரியோ இருவரும் – ஆங்கிலத்தில்.
•ராமேஷ்வர் டெலி பிஜேபி – அசாமி மொழியில்
•தீபஸ்ரீ சவுத்ரி – பங்க்லா (வங்க)மொழியில்
•கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் மலையாளத்திலோ ஆங்கிலத்திலோ உறுதிமொழி எடுக்காமல் இந்தியில் உறுதிமொழி எடுத்தார்.
•ஆந்திர மற்றும் தெலுங்கனா எம் பிக்கள் தெலுங்கு சிலர் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தார்கள்.
•பிஜேபி எம்பி ஜனார்தன் சிங்க் சிக்ரிவால் போஜ்புரி மொழியில் உறுதிமொழிஎடுக்க முன்வந்தார். ஆனால் காரணம்போஜ்புரி மொழி இந்திய அரசியல் சட்ட பட்டியிலில் தேசிய மொழிகளில் ஒன்றாக இன்னும் இடம் பெறவில்லை.
இப்படி பலர் .......
பாரதி சொன்ன செப்புமொழி பதினெட்டு:
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்
1. அங்கம்
2. அருணம்
3. கலிங்கம்
4. கவுசிகம்
5. காமபோசம்
6. கொங்கணம்
7. கோசலம்
8. சாவகம்
9. சிங்களம்
10. சிந்து
11. சீனம்
12. சோனகம்
13. துளுவம்
14. பப்பரம்
15. மகதம்
16. மராடம்
17. வங்கம்
18. திராவிடம் (திராவிடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும்.)
#நாடாளுமன்ற_உறுப்பினர்கள்_உறுதிமொழி
#Oath_of_MPs
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-06-2019

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...