Saturday, June 22, 2019

தெலுங்கானா செய்திருப்பதை பாருங்கள்

தெலுங்கானா செய்திருப்பதை பாருங்கள்,
3 வருடத்திலே 80 ஆயிரம் கோடிக்கு ஒரு நீர்பாசன குடிநீர் வழங்கல் திட்டத்தை தெலுங்கானா செயல்படுத்தி உள்ளது.
காலேஸ்வரம் திட்டம் என தொடங்கும் கிராமத்தின் பெயர் கொண்ட திட்டம் தினம் 2 டிஎம்சி தண்ணீரை மின்சார பம்புகள் மூலம் 80 மீட்டர் உயரத்திற்கு தூக்கி நீர்ப்பாசனத்திற்கும் குடிநீருக்கும் வழி செய்கிறது.
1800 கிலோமீட்டருக்கு புதிய கால்வாய்கள் வெட்டப்பட்டு 18 லட்சம் புதிய விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் 18 லட்சம் விளைநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.
பிரணஹிதா நதியில் இருந்தும் கோதாவரி நதியிலே இருந்தும் இந்த நீர் எடுக்கப்படுகிறது.
ஹைதிராபாத் நகருக்கு 30 டிஎம்சி தண்ணீரும், மற்ற கிராமங்களுக்கு 10 டிஎம்சி தண்ணீரும் குடிநீருக்காக வழங்கப்படும்.
137 மெகாவாட் மின்சாரத்திலே இயங்கும் திட்டம் இது. தனியாக ஒரு மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுக்க இந்த திட்டத்தின் மின் மோட்டார்களை இயக்க தேவைப்படும்.
மூன்று மாநிலங்கள் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஒற்றுமையாக நின்று இதை செய்து காட்டியுள்ளன. மகாராஷ்டிராவும் தெலுங்கானாவும் பல ஒப்பந்தங்கள் மூலம் நதிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளன.
இந்த திட்டம் வருடத்திற்கு 240 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தும்.
கர்நாடகா காவீரியிலே திறந்துவிடும் தண்ணீர் அளவு 192 டிஎம்சி தான்.
அதாவது காவிரியிலே வருடம் முழுக்க எவ்வளவு தண்ணீரை கர்நாடகா திறந்துவிட ஒப்புக்கொண்டுள்ளதோ அதை விட 50 டிஎம்சி அதிகமான தண்ணீரை பம்புகள் மூலம் ஏற்றி விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
இன்றைக்கு சாக்கடை நீரை லாரிகளிலே எடுத்து சென்று குடிநீர் என சொல்லும் தமிழர்கள்
தெலுங்கானா இன்றைக்கு அணைத்து பத்திரிக்கைகளிலும் முதல் பக்க விளம்பரம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...