Tuesday, June 25, 2019

கழகத் தலைவர் மீது அதிருப்திக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது

விவசாய போராட்ட செயற்பாட்டாளர் அய்யக்கண்ணு, கழகத்தலைவர் அவர்களை சந்திக்க நேரம் கேட்டதாகவும் அது உடனடியாக அளிக்கப்படவில்லை என்றும் தகவல். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் அய்யாக்கண்ணு இதனால் அதிருப்தி அடைந்திருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கழகத் தலைவர் மீது அதிருப்திக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது என அறியேன் நான். டெல்லியில் நடத்திய போராட்டத்தை மதித்தேன். நான் மட்டுமல்ல இங்கு பலரும் அய்யாக்கண்ணு மீது வைக்கப்பட்ட பல அவதூறுகளுக்கு எதிராக பயணப்பட்டு இருக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த போராட்டம் நியாயமானது ஆனால் கையாண்ட யுக்திகள் நியமானவைகளாக தெரியவில்லை. கோவணம் கட்டிக் கொண்டு மானத்தை மறைப்பவன் தான் விவசாயி. ஆனால் அம்மனப் போராட்டம் விவசாயிகளையே தலைக்குனிவை வைத்தார். அத்துடன் நின்று போகவில்லை.
மோடி போட்டியிடும் தொகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் , மோடிக்கு எதிராக நிர்வாண போரட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் செய்வோம் என்று பேட்டியளித்தார். தொடர்ந்து பிஜேபிக்கு எதிராக பேசிவந்த அய்யக்கண்ணு 
டி.டி.வி தினகரனை சந்தித்தார். அவருடன் அமர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தாக நினைவு. அது வரை பாராமுகமாக இருந்த டெல்லி அவரை அழைத்தது. என்ன பேசினார்கள் என தெரியாது. போராட்டத்தை கைவிட்டார். அமிர்த்ஷா தங்களின் பெரும்பான்மை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் வாரனாசியில் போட்டியிடும் முடிவை கைவிட்டதாக பல்டி அடித்தார். அது அவர் நிலைபாடு. அதில் தலையிட முடியாது.

டி.டி.வி யை சந்தித்த பின்னர் மீண்டும் அறிவாலயம் வந்து தலைவரை சந்திப்பதெல்லாம் என் போல் தொண்டர்களால் ஏற்க முடியாத போது தலைவர் அவர்களின் தளகர்த்தர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? நிச்சயம் சந்திப்பு நடைபெறக் கூடாது. இவர்களை நம்பி களத்தில் இறங்கக்கூடாது. சாதியின் பெயரால் விவசாய சங்கங்களை பிரித்ததை தவிர வேறென்ன சாதித்தார் என்பதும் தெரியாது.
1972ல் விவசாயிகளின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவிட்டதை வாபஸ் பெற வைத்தவர், தேசிய நதிநீர் இணைப்புக்காக ஏறத்தாழ 30 ஆண்டுகால சட்டபோராட்டம் செய்த அண்ணன் Radhakrishnan KS அவர்களது போராட்டத்தை ஒப்பிடுகையில் அய்யாக்கண்ணு மீதி ஊடக வெளிச்சம் விழுத்ததை தவிர வேறொன்றுமில்லை. தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற முப்பதாண்டுக்கால போராட்டத்தில் எத்தனை விமானப்பயணங்கள், எத்தனை ரயில்பயணங்கள், எத்தனை அரசியல் இடர்பாடுகள், இதற்கு நடுவே ஒரு இதய அறுவை சிகிச்சை உண்டு. மனைவி மரணப்படுக்கையில் அப்பலோவில். சம்பளம் பெறும் எந்த பொறுப்பிலும் அவரில்லை. அவரது சொந்த வருமாணத்தில் வழக்கு நடத்தினார். இன்று பலரும் தேசிய நதிநீர் இணைப்புக் குறித்து விவாதிப்பதே அவரது வழக்கில் அண்ணன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்ற பின்னர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சந்திக்காத பிரதமர்கள் இல்லை. எந்த ஆட்சி நடந்தாலும் அந்த ஆட்சியின் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க தவறியதுமில்லை. இப்பவும் சுப்ரீம்கோர்ட் பார் கவுன்சிலில் இந்த வழக்கின் தீர்ப்பு நகல்கள் ஆச்சர்யத்துடன் வாசிக்கப்படுகின்றது. இத்தகைய ஒருவர் எத்தனையோ நிராகரிப்புகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த போதும் எவ்வித அதிருப்தியையும் கொட்டியது இல்லை.
இவருடன் ஒப்பிடுகையில் அய்யாக்கண்ணு பெரிதாக சாதித்ததாக தெரியவில்லை. திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்காது என மோப்பம் பிடித்து பிஜேபி பக்கம் தாவிய, கடந்த தேர்தலில் பிஜேபிக்கு எதிராகவோ, திமுக கூட்டணிக்கு ஆதரவாகவோ ஒற்றை வார்த்தையை கூட பேசாத அய்யாக்கண்ணு அறிவாலயம் வந்துவிடக் கூடாது என்பதில் அறிவாலயம் உறுதியாக இருக்க வேண்டும்..
அய்யாக்கண்ணு ஆரம்பக்கால ஆர்.எஸ்.எஸ் ஆவார்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...