எழுபது வயசுக்கு மேலே முதுமை காலத்துல குனிஞ்சு வளைஞ்சு, உத்துப்பார்த்து, இடுப்பு கடுத்து, காடு கரையா அலைஞ்சு அங்க ஒரு வேப்ப முத்து, இங்க ஒரு முத்தா பொறுக்க நாள் பூரா ஆயிருது. வேப்ப முத்து வீட்டுக்கு கொண்டு வந்து காயப்போட்டு கடையில போட்டா வியாபாரி ஒருகிலோவ முக்கால் கிலோவா எடை போடு தாரு. கோவில்பட்டி, சாத்தூருல கிலோ 40 ரூபாய் விலை போகுது. ஆனால் எட்டையபுரத்துல கிலோ 30ரூபாய்க்கு கேட்கிறாங்கலாம் ....என்ன செய்ய?
வயசான காலத்தில் ஜூவத்தனுக்கு வேறு வழி தெரியல இந்த கரிசகாட்ல....
No comments:
Post a Comment