Monday, August 12, 2019

இன்னும் மூன்று ஆண்டுகளில் வேலி மரமும் இராது. கரிமூட்டத்தொழிலும் இராது.

விளாத்திகுளம் - புதூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சாத்தூர், சிவகாசி, ராஜாபளையம் போன்ற வானம் பார்த்த கரிசல் பூமியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் கட்டுபடியாகவில்லை.

இந்த சூழலில் பெருமளவு நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போட்டுவிட்டனர். அந்நிலங்களில் வேலிக்கருவை செடிகள் முளைத்து மரங்களாகி விட்டன. ஆண்டுக்கு ஆண்டு விவசாய பரப்பு குறைந்து கொண்டே வந்தன. இச்சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் விறுவிறுப்பாக சூடு பிடித்தன, பயன்படாத தரிசு நிலங்கள் வைத்திருந்து என்ன பயன் என கருதிய விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு ஏக்கர் அளவு நிலங்களை விற்று விட்டு நகர்புறத்தில் சென்ட் அளவு இடத்தை விலைக்கு வாங்கினர்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏற்படும் இழப்பை அரசு விவசாயிகளுக்கு ஈடுகட்டுகிறது. தரிசு நிலங்களில் முளைத்திருந்த வேலி மரங்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கர் ரூ 5 ஆயிரம் வரை விலை போனது.வேலிக்கருவை மரங்கள் வெட்டி கரிமூட்டம் போட்டு வந்தனர். வேலி மரங்களின் வேர் சுமார் 198 அடி ஆழம் வரை மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சி சத்தை திண்றுவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அரசு விவசாயத்திற்கு பல வகையில் உதவி வருவதாலும், இளம் விவசாயிகள் விவசாயத்தில் ஆர்வப்படுவதாலும் தரிசு நிலங்களில் உள்ள வேலி மரங்கள் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் படிப்படியாக தோண்டி விவசாயத்தில் இறங்கி விட்டனர்.மழைமறைவு பிரதேசமாக இருந்த விளாத்திகுளம், எட்டையபுரம் பகுதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மழை ஓரளவு முன்பை விட பெய்து வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் வேலி மரமும் இராது. கரிமூட்டத்தொழிலும் இராது.

நன்றி-Muscat Ssavraja.

Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, mountain, sky, outdoor, nature and water

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...