Thursday, February 13, 2020

சென்னையை அச்சுறுத்தும் ஒலி மாசு!*


*சென்னையை அச்சுறுத்தும் ஒலி மாசு!*

இன்றைய (13.02.2020) ‘மிண்ட்’ ஆங்கில நாளிதழ் இந்தியாவின் முக்கிய நகரங்களின் ஒலி மாசு குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு  ஆகிய  6 முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், அதிகமாக ஒலிமாசால் பாதிக்கப்பட்ட நகரம் சென்னை என்பது தெரியவந்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில், பகலில் 55 டெசிபல் அளவும், இரவில் 45 டெசிபல் அளவும் இருந்தால் சாதாரண அளவு என்றும் அதைவிட சத்தம் எழுந்தால் அதிக இரைச்சல் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒலி அளவை நிர்ணயித்துள்ளது. ஆனால் சென்னையில் பகலில் 67.8 டெசிபலும் இரவில் 64 டெசிபலும் ஒலி அளவாகப் பதிவாக இருக்கிறது. 
கார்களில் அதிக  இரைச்சலுடன்  கூடிய ஹாரன்களைப் பயன்படுத்துவதை இன்றைக்கு பெருமையாகக் கருதுகிறார்கள். லண்டன், நியூயார்க் போன்ற உலக நகரங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் ஹாரன்கள் பயன்படுத்துவதில்லை.  அதுவும் தமிழ்நாட்டில் தான் இப்படியான அதிமான, வேகமான ஒலி எழுப்பான்கள் பயன்பத்துவதை அந்தஸ்த்து என நினைப்பது போலித்தனமானது.
இது உடல்நிலையை மட்டுமல்ல, மூளையுடைய செயல்பாட்டையும் முடங்கச் செய்துவிடும்.
மக்கள் உணர்ந்தால் தான் மாசற்ற உலகை உருவாக்க முடியும். மக்கள் உணர வேண்டும்.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கடந்த ஒரு வாரமாக பணிகளாற்றி வருகிறேன். இன்று இது குறித்தான செய்தி மிண்ட் பத்திரிகையில் வந்தது சற்று ஆறுதலாக இருக்கிறது.

https://epaper.livemint.com/Home/ShareArticle?OrgId=38a6e4d1&imageview=1

#ksrpost

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...