Monday, February 24, 2020

ட்ரம்ப் - மோடி சந்திப்பில் விடயங்கள்*

*ட்ரம்ப் - மோடி சந்திப்பில்  
விடயங்கள்*

ட்ரம்ப் -மோடி சந்திப்பு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தொற்றிக்கொண்ட பரபரப்பு அதிகார வட்டாரங்களில் சூடுபிடித்துக்கொண்டே இருக்கிறது.

 வர்த்தகர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், புலனாய்வு அதிகாரிகள் என அனைவரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வரும் ட்ரம்புக்காக தொடர்ச்சியாக உழைக்கிறார்கள். 

பல எதிர்பார்ப்புகளை விதைத்திருக்கும் இந்த சந்திப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

*1. சந்திப்புக்கான தயார்நிலை*

ட்ரம்ப் மோடி சந்திப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, நூற்றுக்கணக்கான ரகசிய கண்காணிப்பு முகமைகள் இந்தியாவின் புலனாய்வுத்துறையுடனும், சிறப்புப் பாதுகாப்புக் குழுவுடனும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறார்கள். ட்ரம்ப பயன்படுத்தவிருக்கும் சிறப்பு போயிங் 747-உடன், குண்டுவெடிப்புகளில் பாதிக்காத காரும் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

*2. பொருளாதார பங்கீட்டு ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு*

1980-இல் இருந்து இந்திய அமெரிக்க உறவுக்கான அடிப்படை விஷயம் என்பது பொருளாதார உடன்பாடுகள்தான். சமீப காலங்களில், அமெரிக்காவின் கட்டுப்பாடுகளும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவும் அந்த பொருளாதார உடன்படிக்கைகள் தொடர்வதற்கு வாய்ப்புகள் அளிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பலரும் எதிர்பார்த்த limited Free Trade Agreement என்னும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திடப்போவதில்லை. சுலபமான முதலீடுகள் மற்றும் தொழிற்துறை சார்ந்தவர்களின் இடப்பெயர்வு குறித்த விஷயங்களில் ஒப்பந்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*3. பாதுகாப்பு*

2000-ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்காவாக இருந்து வருகிறது. 10 பில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட மொத்தம் 8 முதல் 10 பிரதான ஆயுதம் பெறும் முடிவுகளில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

F21 காம்பேட் வகை ஜெட் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா வலியுறுத்தும். இந்தியாவின் பாரம்பரியமான பாதுகாப்பு முறையுடன் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றுபடுவதில் அமெரிக்காவுக்கு சிக்கல் நிலவுகிறது.
எனினும் இரு தரப்பும் தங்களுக்கு இடையிலான கடந்தகால கசப்புகளை புறந்தள்ளிவிட்டு, ஆசியக் கண்டத்தில் எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பான உறவுமுறைக்கு அடித்தளமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*4. எல்லைப் பிரச்சனைகளில் இரு நாடுகளின் நிலைப்பாடு*

காஷ்மீர் விஷயத்தில் தலையிட முயன்ற அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்கனவே பெரிய நோ சொல்லிவிட்டது. பாகிஸ்தானுடன் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. ஆஃப்கானிஸ்தான் மீதான குறிப்பிடத்தக்க ஆற்றலையும் அமெரிக்கா செலுத்தத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான பிரச்சனையில் எடுக்கக்கூடிய சில முடிவுகளும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கிழக்கு ஆசிய -சீனா புவி அரசியல்.இந்து மகா
சமுத்தரம் குறித்து

*5. இந்திய - அமெரிக்க உறவு : சாமான்யருக்கான பலன்கள்...*

மெக்சிக்க நாட்ட்டினருக்குப் பிறகு, அமெரிக்காவின் இருக்கும் அடுத்த வெளிநாட்டு இனக்குழு இந்தியர்கள்தான். பொருளாதாரம், அரசு, கல்வி, அரசியல் என அனைத்து தளங்களிலும் இயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் அமெரிக்காவின் 1 சதவிகித மக்கள்தொகையாகவே இருந்தாலும், அவர்களின் அரசியல் சார்ந்த, வாக்கரசியல் சார்ந்த பங்களிப்பு முக்கியமானது. விசா முதல் தேசியவாதம் வரை புதிய சவால்களைச் சந்தித்துவரும் இந்திய வம்சாவளி மக்கள், இந்த சந்திப்பை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...