Tuesday, February 25, 2020

இன்றைய_டெல்லி_கலவரங்கள் #டெல்லி_1984_கலவரங்கள்

#இன்றைய_டெல்லி_கலவரங்கள் 
#டெல்லி_1984_கலவரங்கள்
————————————————
இன்றைக்கு டெல்லியில் நடக்கின்ற கலவரங்களும், துயரங்களும் வேதனை மட்டுமல்ல,நாட்டின்முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் பாழ்படுத்தும். இதே மாதிரி கடந்த  1984 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா  காந்தி   அவருடைய பாதுகாவலர்களால்  படுகொலை செய்யப்பட்டபோது, சீக்கியர்கள் மீது டில்லி மட்டும்மில்லாமல் இந்தியா முழுவதும்   கொடூர  தாக்குதல் நடத்தப்பட்டது.  அப்போது ஹெச்.கே.எல். பகத், ராஜேஷ் பைலட், கமல்நாத்  போன்றவர்கள்   மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல இன்றைக்கு  குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது தாக்குதல்   நடக்கின்றன   என்று பிரச்சனைகள்  எழுந்துள்ளன. கவலை
அளிக்கிறது.

1984இல் இந்திரா காந்தி மறைந்தபோது இந்த காட்சியை கண்முன்னே கண்டேன். டெல்லியில் அவருடைய இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது ;அன்றைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் நெடுமாறன். போன்ற தலைவர்கள் எல்லாம் இன்றைய பழைய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது பால்,  காய்கறிகள் போன்றவைகள்தமிழ்நாடுஇல்லதிற்க்குகூட வருவதற்கு சிரமங்கள் இருந்தது. அவ்வளவு முடக்கப்பட்டது. இருப்பினும் வாழப்பாடி இராமமூர்த்தி,  மத்திய முன்னாள்அமைச்சர்கே.பி.உன்னி
கிருஷ்ணன் போன்றோருடைய வாகனங்களில் சென்று இந்திரா காந்தி வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதெல்லாம் நினைவில் உண்டு. டெல்லியில் சுற்றி வந்த போது தாரியா கஞ்ச், கன்னட்பேலஸ், சரோஜினி மார்க்கெட் போன்ற பகுதிகள் எல்லாம் கலவரத்தில் தீயாக எரிந்தது. அப்போது உணவு கூட கிடைக்காமல் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள தமிழ்நாடு கார் ஷெட்டில் உணவு   விடுதி நடத்துபவர்கள் உணவளித்து தான் உண்டோம். அன்றைய தமிழக  காங்கிரஸ் தலைவர்கள்  ஏகேஎஸ, எஸ.கே.டி. ராமச்சந்திரன் போன்றவர்களோடு பட்ட
சிரமங்கள் அதிகம். அதுபோல, இன்றைக்கும் டெல்லி தீயாக எரிகிறது என்று பத்திரிக்கை வாயிலாக தெரிய வருகிறது. இது நல்லதல்ல. 

இந்தியா என்பது பல்வேறு மதங்களும், இனங்களும், மொழிகளும், கலாச்சாரமும் கொண்ட நாட்டில் பன்மையில் ஒருமை காண வேண்டுமேயொழிய இப்படியான கலவரங்கள் ஏற்படுத்துவது நல்லதல்ல. இவ்வாறு ஏற்படுத்துபவர்களின் மனசாட்சிக்கே அதை விட்டுவிட வேண்டும். இதே நிலைமை இந்திரா காந்தியின் படுகொலையின் போது கோயம்புத்தூரில் உள்ள சீக்கியர்களின்
வியாபார நொறுக்கப்பட்டது. அப்போது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர்கள் கீதா ராமசேஷன், தண்டபாணி,   அடியேனும் முயற்சிகளெடுத்து கோயமுத்தூரில் பாதிக்கப்பட்டோருக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 1984 காலகட்டங்களில் இழப்பீடு வாங்கிக் கொடுத்தோம். இந்திரா காந்தி மறைவிற்கு எப்படி கோயமுத்தூரில் இருந்த சீக்கியர்கள் பாதிக்கப்
பட்டனரோ அதுபோல ஏதாவதொரு கலவரம் என்றால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் என்பதை கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். 

கடந்த 1984 கலவரத்தைக் குறித்து வாஸந்தி அவர்கள் நேரடியாக டெல்லியில் அந்த கொடுமைகளை பார்த்தததைக் குறித்து தன்னுடைய படைப்பான ‘மௌனப் புயலில்’ பதிவு செய்துள்ளார். தற்போது வரை 9 பேர் இறந்துள்ளதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்றைக்கு என்ன நிலைமையோ? 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.02.2020
#ksrposts
#ksrpostings
#delhi_riots

#டெல்லி_கலவரங்கள்




No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...