Saturday, June 12, 2021

#இன்று_12_6_2021_மாலை… #கிராவும்_கோவில்பட்டியும் #என்_பதிவு #அரசு_கலைக்_கல்லூரி_கோவில்பட்டி.

#இன்று_12_6_2021_மாலை…
#கிராவும்_கோவில்பட்டியும் #என்_பதிவு
#அரசு_கலைக்_கல்லூரி_கோவில்பட்டி.
                          (1)
கி.ரா.வும் கோவில்பட்டியும்
வெள்ளைக்காரன் காலத்தில் கோவில்பட்டி ஊர் தாலுகா தலைநகரமாக இல்லை. அது எப்படி தாலுகா தலைநகரமாக மாறியது என்பதை கி.ரா. தனது முதல் நாவலான கோபல்லகிராமத்தில் எழுதியுள்ளார்.
கோவில்பட்டியைப் பற்றி தோழன் ரெங்கசாமி கதையில் இப்படி எழுதுகிறார்
ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். நகரம் என்றும் சொல்ல முடியாது. சுத்த பட்டிக்காடு என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் தாலுகாவின் தலைநகர். இங்கே இரண்டு மில்கள் இருந்தன. ஒரு  ஹைஸ்கூல் இருந்தது. “அருமையான” போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி, கோர்ட் முதலியன எல்லாம் இருந்தன.
ஜடாயு என்ற கதையில் தாத்தையா நாயக்கர் தன் நண்பர் வீட்டில் தங்கியிருந்த இரவில் ஒரு பெண்ணைக் காப்பாற்றத் தன் கைகளை இழந்து இறந்ததை விவரித்திருப்பார். இந்தக் கதை நடக்கும்இடமே கோவில்பட்டிதான்.
இசை 
இயக்க வேலை
எழுத்து
என்ற வரிசையில் அமைந்து இருந்தது கி.ரா. வின் வேலை.
ஒரு காலத்தில் பஸ் கம்பெனி நடத்தினால் என்ன யோசனையும் கி.ரா. இருந்தது. ஏதோ நடைபெறவில்லை. நல்லதாய் போயிற்று. இல்லாவிட்டால் கரிசல் இலக்கியம் மலர்ந்து இருக்காது.
இசை ஆர்வம் காரணமாக பல தடவை விளாத்திகுளம் சாமிகளுடனோ தனியாகவோ காருகுறிச்சி அருணாசலம் வாழ்ந்த வீட்டிற்குப்போய் வருவார்.
காருகுறிச்சியார் டி.என்.ஆர். சீடர் என்பதால், டி.என்.ஆர். கச்சேரி கோவில்பட்டி அருகே நடக்கும்போதெல்லாம் காருகுறிச்சியார் கி.ரா. ஒரு கார்டு மூலம் தாக்கல் சொல்லி விடுவார். கு.அழகர்சாமியும் கி.ரா. கச்சேரி நடக்கும் இடங்களுக்கு சென்று விடுவார்கள்.
மனுஷங்க இந்து தொடரில் சீனி நாயக்கரைப் பற்றி சொல்லும்போது
கிருஷ்ணன் கோவில் சத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பார்.  தங்கள் கால் செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைவது, அங்கே வரும் காற்று பற்றி, உள்ளே மதிய தூக்கம் போடும் ஆசாமிகள் பற்றி, பிரபல வித்துவான்கள் நடத்திய கச்சேரியைப் பற்றி சொல்லிருப்பார்.
பஸ் ஸ்டாண்டு அருகில் டி.பி. அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த கந்தசாமி செட்டியார். 
இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள லாயல்மில் நடராஜன் வீடு
மூப்பனார் பேட்டை
பேட்டை ஒட்டியிருந்த கட்சி ஆபீஸ்
சென்னை ஓட்டேரி டாக்டர் கதிரேசன் தம்பி நீலக்குயில் அண்ணாமலை நடத்தி வந்த ஸ்வீட் மனோரமா கடை.
தெற்குபஜாரில் இருக்கும் தங்கள் வீட்டிற்கு கவிஞர் தேவதச்சன் கி.ரா. வை வீட்டிற்கு ஒரு நாள் அழைத்து செல்கிறார். அந்தக் காலத்து கட்டிடம். உள்ளே நுழைந்ததுமே அப்படியொரு குளுமை இருக்கும்.
உள்ளே நுழைந்த கி.ரா. “வீட்டை பழமை மாறாமல் அப்டியே இருக்கே.”என்று சொல்லி இருக்கிறார். முதல் தடவையாக கி. ரா.வை அழைத்து வருகிறோம் என்று நினைப்பில் இருந்த தேவதச்சன் சட்டென விழித்தார். “அப்ப இந்த வீட்டிற்கு இதுக்கு முன்னாடி வந்து இருக்கிறீர்களா” எனக் கேட்க “ஆமாம். உங்க அப்பா கலியாணத்துக்கு” என்றாராம். இது தேவதச்சன் கூறியது.
1976க்கு பின் கோவில்பட்டி வரும்போது தெற்குபஜார் ஐக்கிய வர்த்தக ஸ்டோரில் தான் பலசரக்கு வாங்குவது. 
பலசரக்கில் கண்டிப்பாக இடம் பெறும் அயிட்டம்
எமிரி பருப்பு 
சிங்கப்பூர் சாம்பிராணி
அதற்கு அருகில் கட்டிடம் சாரதா ஸ்டுடியோ. இங்குதான் மதிய ஓய்வு மாரீஸூடன். சுமார் 4 மணிக்குமேல் தேவதச்சன் நகைக்கடை.
அப்படியே ஸ்வீட் மனோரமா அண்ணாலையைப் பார்த்துவிட்டு இடைசெவல் செல்லும் டவுண் பஸ் அல்லது இடைசெவல் நிற்கக்கூடிய திருநெல்வேலி பஸ்ஸில் ஏறி இடைசெவல்.
பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள டாக்டர் எம்ஜியார், டி.பி. நிலையத்திற்கு அருகில் இருந்த கல்யாணி லாட்ஜில் நண்பர் ராமு, தேவதச்சன், கெளரிஷங்கர் மற்றும் நண்பர்களுடன் கூடிப் பேசுதல்.
போட்டோ என்றால் மெயின் ரோட்டில் இருந்த ஏ.எஸ்.எல்.ஆர்.காபித் தூள் கடை மாடியிலிருந்த  தேவி ஆர்ட் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ 1942 இல் ஓவியர் கொண்டையராஜ் உருவாக்கியது.
இந்த ஸ்டுடியோ கீழ் இருந்த காபித்தூள்தான் எப்போதும் கி.ரா. வாங்குவது.
ஸ்டேட் பாங்கு தளபதி கோபாலகிருஷ்ணன். இவர் கி.ரா. நண்பர். இவரது வீட்டிற்குப் போகும் வழியில்தான் காருகுறிச்சியார் வீடு.
தாத்தா சொன்ன கதையில் தளபதி கோபாலகிருஷ்ணன் கேட்டு வாங்கிக் கொடுத்த கதைகள் ஐந்து உண்டு.

கோவில்பட்டியில்  இந்திய நெருக்கடிக்காலமான 75யில் சமயம். ஸ்டேட் பாங்க் பால்வண்ணன் போன்றோர் ஆதர்ஸ திரைப்பட இயக்கத்தை நடத்தி வந்தனர்.  அதில் என்ன விசேசம் என்றால் வழக்கமாக இதுமாதிரி திரைப்படக்கழகத்தில் உறுப்பினர்கள் மட்டும்தான் படம் பார்க்கலாம். அதுக்கு மாறாக கோவில்பட்டி நாராயணசுவாமி தியேட்டரில் பால்கனியில் உறுப்பினர்களுக்கு இருக்கை. பெஞ்சு டிக்கட், தரை டிக்கட் எல்லாம் உறுப்பினர் இல்லாதவர்களுக்கு என்று அனுமதி அளிக்கப்பட்டது. இக்கழகத்தார் திரையிட்ட பதேர் பாஞ்சாலி திரைப்படத்தைப் பார்த்தார். இதை அவரே கி.ரா. கடிதங்களில் பதிவும் செய்திருக்கிறார்.
இவை போக
தி.க. ஈ.வே.வள்ளிமுத்து, பஞ்சுக்கடை செளந்திரபாண்டியன், லாயல்மில் முருகேசன் (யாரின் மைத்துனர் மகன்) ஆகியோர் இவரது நண்பர்கள்தான்.

காருகுறிச்சி சிலைய  பஸ் நிலைய
பேருந்து மேலாளர் முயற்ச்சியில் ஜெமினி, சாவித்திரி கோவில்பட்டி வைத்தனர். கிராவுக்கு இதில் பங்கும் உண்டு.

இடைசெவல் பஸ் நிறுத்தம் கிராவின்
1980லிருந்து பணிகள் அதிகம்… (தொடரும்).

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

 #ksrpost
12-6-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...