Monday, March 23, 2015

நாடுகள் செய்யும் படுகொலையே மரணதண்டனை - போப். Abolish death penalty -Pope







போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் தொடர்ந்து மரண தண்டனைகள் கூடாது என்று தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து  உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 21-03-2015 அன்று மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச அமைப்புக்கு இதுகுறித்து தன்னுடைய தெளிவான கருத்தை வலியுறுத்தி கடிதமும் எழுதியுள்ளார் போப் பிரான்ஸிஸ்.

மரணதண்டனை மூலம் ஒரு மனிதனைக்கொல்ல இன்னொரு மனிதனுக்கு ஒருபோதும் உரிமை கிடையாது. அதை நியாயமும்  படுத்தமுடியாது. எவ்வளவு கொடிய குற்றம் செய்தவனாக இருந்தாலும்  அவனுக்குத் தூக்குதண்டனை வழங்குவதால் என்ன நீதி கிடைக்கப் போகிறது.

மரண தண்டனையினால் எந்த நன்மையும் நல்ல பலனையும் உலகில் எந்த நாடும் இதுவரை உருவாக்கவில்லை. குற்றம் செய்தவன் திருந்த தண்டனை கொடுக்கவேண்டும். அதை மறுக்கமுடியாது.

மரணதண்டனை வலியில்லாமல் நிறைவேற்றலாம் என்ற விவாதங்கள் இருந்தாலும்கூட எந்த வகையிலும் தூக்குதண்டனையை மனிதாபிமான செயலாகக் கருதமுடியாது. மரண தண்டனை என்ற பெயரில் அந்தந்த நாடுகள் செய்கின்ற படுகொலைதான் தூக்குதண்டனை என போப் பிரான்ஸிஸ் சொல்லியுளளது பாராட்டுக்கும் பரிசீலனைக்கும் உரிய விஷயம் ஆகும்.


போப் பிரான்சிஸ் உலகநாடுகளின் அமைதியும், மத நல்லிணக்கங்களுக்கும், மனித உரிமைகள் காப்பது குறித்தும் அவர் எடுத்துக் கொள்கின்ற அக்கறைகள் நிமிர்ந்து நின்று அவரை வணங்கவேண்டும் என்று தோன்றுகிறது.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
23-03-2015

#Abolish_death_penalty

#pope_francis 

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...