Monday, March 9, 2015

சாஸ்த்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில்... Shastri -Sirimavo Agreement




 சாஸ்த்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் குறித்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்   09-03-1965 அன்று, அன்றைய மக்களவை உறுப்பினர் ஆர்.இராமநாதன் செட்டியார் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மலையககத் தமிழர்கள் எவ்வளவு சொத்துக்களோடு இந்தியாவிற்குள் வரலாம் என்று கேள்வியை முன்வைத்தார்.

அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர். தினேஷ் சிங் அக்கறையின்றி மழுப்பலான பதில் சொன்னது வேதனையாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல், 75ஆயிரம் ரூபாய் வரை எடுத்துவரலாம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது என்று பொறுப்பற்ற பதில்களை ஒப்புக்குச் சொல்லி  டெல்லி பரிவாரங்கள் 1965லும் நடந்துகொண்டது.

அகதிகளாக வருபவர்கள் தானே என்ற மனநிலையில் தான் மலையகத் தமிழர்களை மிகத் தாழந்த பார்வையோடு மத்திய அரசு அணுகியது அன்று.

என்றைக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை என்பது டெல்லிக்கு உப்பும், ஊறுகாயும் போன்றுதான் என்ற நிலை. அதே நிலை இன்றுவரைத் தொடர்கின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...