Friday, March 13, 2015

ரா.கிருஷ்ணசாமி நாயுடு காமராஜர் அமைச்சரவையில் ஏன் இடம்பெறவில்லை -Why R.K wasn't accommodated in Kamarajar cabinet?.

Why R.K wasn't accommodated in Kamarajar cabinet?.




ஆர்.கே மறைந்த அன்று..
பெருந்தலைவர் காமராசர்  துக்கம் விசாரிக்க வந்தபோது எடுத்தபடம். 



நேற்றைக்கு பெருந்தலைவர் காமராஜரும், ரா.கிருஷ்ணசாமி நாயுடுவும் 1932ல் தொம்பக்குளம் தெருவில் சைக்கிளில்  பயணிக்கும் புகைப்படத்தைப் பார்த்ததும் , ரா.கி பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தேன்.

அந்தப் பதிவை வாசித்த பலரும், காமராஜருக்கு இவ்வளவு நெருங்கிய நண்பரான ரா.கி ஏன் காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்ற கேள்வியைக் கேட்டார்கள். அதுபற்றி விசாரித்தவகையில்,

13-04-1954 , 13-04-1957 மற்றும் 15-03-1962 ஆகிய மூன்று முறை பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவைகளில். ஏ.பி.ஷெட்டி, எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம்,
எம்.ஏ. மாணிக்கவேலு, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பி.பரமேஸ்வரன், எஸ்.எஸ் இராமசாமி படையாச்சி, ஆர்.வெங்கட்ராமன், பி.கக்கன், வி ராமைய்யா, லூர்தம்மாள் சைமன், ஜோதி வெங்கடாச்சலம், சர்க்கரை மன்றாடியார், ஜி.பூபராகவன், எஸ்.எம்.ஏ மஜீத், ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

ஆர்.கேவைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று அப்போதைய காலகட்டங்களில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தும் அவர் சேரவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத்தையும், சத்தியமூர்த்தி பவன் கட்டுமானப் பணிகளையும் கவனிக்கவேண்டிய பொறுப்பு ஆர்.கேவுக்கு இருந்ததால் அவர் அமைச்சரவையில் சேரவில்லை என்ற தகவலும் உள்ளது.

காமராஜரின் அமைச்சரவையில் குறைந்த எண்ணிக்கையிலே அமைச்சர்கள் இருப்பார்கள். சிறிய அமைச்சரவை அவருடையது. மட்டுமல்லாமல் காமராஜரும், ஆர்.கேயும் பக்கத்துப் பக்கத்து தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் வேண்டாம் என்று கூட நினைத்திருக்கலாம்.

ஒரு பார்வையாளனாக என்னுடைய கருத்து என்னவென்றால், ஆ.கே தமிழ்நாட்டில் அமைச்சராகி இருக்கவேண்டும், அல்லது ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம் போன்று மத்தியில் அமைச்சராகி இருக்கவேண்டும். இது ஒரு வரலாற்றுப் பிழையாகவே நமக்குப் படுகின்றது.

ஆர்.கேயும் தனக்கு பதவி வேண்டுமென்று இக்காலத்து அரசியல்வாதிகள் போல கேட்கக் கூடியவரும் இல்லை. அரசியலில் அவர் ஒரு பண்பாளர். வரலாறு அவரை மறக்காது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...