Wednesday, April 1, 2015

கொழுப்புபிடித்த ரணில் விக்கிரமசிங்கே (Ranil Wickremasinghe)






தமிழக மீனவர்களை கைது செய்யலாம், சுட்டுத்தள்ளலாம் என்று திமிராக தந்தி தொலைக்காட்சியில் பேட்டிகொடுத்த பிறகும், அதே கொடூர புத்தியோடு திரும்பவும் ரணில் விக்ரமசிங்கே பேசியிருப்பதற்கு இந்தியா அரசு என்ன சொல்லப்போகிறது.

மோடி போனார் வந்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கேயிடம் அணு அளவும் மாற்றமில்லையே? இதே ரணில் விக்கிரமசிங்கே பதவியில்லாமல் இருந்த காலத்தில் இந்தியாவின், புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் வந்தபோது தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று சொன்ன நாக்கு இப்போது எங்கே போய்விட்டது.

வங்கக்கடலில் வலைவீசும் அப்பாவித் தமிழக மீனவனுக்கு எல்லைகள்தான் தெரியுமா? இதுமாதிரி பன்னாட்டளவில் அண்டைநாடுகள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது இயற்கையான செய்தி, இதற்கு பலசம்பவங்கள் எடுத்துக்காட்டாக உண்டு, சர்வதேச சட்டங்களிலே இதுசம்பந்தமான விலக்குங்களும், மன்னிப்புகளும் உண்டு என்பதை புரியாமல் முரட்டுத்தனமாக வாய்க்கொழுப்போடு பேசியதற்கு ரணில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

‪#‎Ranil_Wickremasinghe‬

‪#‎TN_Fisherman‬

‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்