Thursday, April 23, 2015

பண்டைய ரோம் - Rome bridge Sant' Angelou, about 1875.

பண்டைய ரோம் (Ancient Rome) என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது.ரோம் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது.

பாரம்பரியத் தொல்கதைப்படி, உரோமை நகரை ரோமுலுஸ், ரேமுஸ் என்னும் இரட்டையர் கிமு 753ஆம் ஆண்டில் நிறுவினர். அவர்களை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாக மரபு.

. அக்காலக் கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. 

ரோமின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. 

மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் ரோம் தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் ரோம் விளங்கியது.

பண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு ரோம்தான். ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் முக்கியமான ஆட்சியாளர்களாகக் கருதப் படுபவர்கள்.. ரோம்  கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர்.

பண்டைய ரோமில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அதில் முக்கிய இடமான சர்க்கா 1875ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. 



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...