Sunday, April 19, 2015

தூக்குக்குத் தூக்கு - The Death Penalty.








கடந்த 2012ம் ஆண்டில் என்னை பலவகையில் வார்ப்பித்த பொதுவுடைமைவாதியும், பிரபல மூத்த கிரிமினல் வழக்கறிஞரும், எங்கள் நெல்லைச் சீமையைச் சேர்ந்த மறைந்த என்.டி. வானமாமலை அவர்களின் நினைவாக, தூக்குதண்டனை குறித்து இந்தியா மற்றும் உலக அளவில் இதுவரை நடந்த நிகழ்வுகளையும்,  நீதிமன்ற நடவடிக்கைகளையும் குறித்து விரிவான நூல் “தூக்குக்குத் தூக்கு” எழுதி வெளியிட்டேன்.

அது இரண்டாவது பதிப்பாக வர இருக்கின்றது. அதற்கான பணிகளை, இளவல் கார்த்திக்.புகழேந்தி ஆற்றிவருகிறார். அதன் ஆங்கிலப்பதிப்பை கொண்டுவரும்  பணிகளை இராதா இராமச்சந்திரன் ஆற்றிவருகிறார்.

கடந்த, 1984ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வாரிசான குருசாமி நாயக்கர் ஒரு கொலைவழக்கில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் குருசாமி நாயக்கருடைய மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டிக்கு குருசாமிநாயக்கர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடியாகி, இதற்குமேல் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்றநிலை இருந்தது.

அன்றைக்கு வை.கோ அவர்கள் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் என்னிடம். “கட்டபொம்மன் வாரிசைக் காப்பாற்ற வேண்டும் என்ன செய்யலாம்.”என்று என்னிடம் கேட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வழக்குபற்றிய நிலையினைக் குறிப்பிட்டதும் என்னிடம் கோபப்பட்டார்.  அன்றைக்கு இதைக்குறித்து, தலைவர் கலைஞர் அவர்களிடம் இப்படியான பிரச்சனை இருக்கிறது என்றும் வை.கோ அவர்கள் சொல்லியிருந்தார்.

இறுதியில் ஒரு முடிவு எடுத்து, பாளையங்கோட்டை சிறையிலிருந்து குருசாமி நாயக்கர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற  பதிவாளருக்கும், சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் தனித்தனியாக இரண்டுவரி தந்தி கொடுக்கச் சொல்லி,  “என்னைக் காப்பாற்றுங்கள்” என்ற தந்தியை வைத்து, 48 மணி நேரத்தில் முயற்சி திருவினையாக்கும் என்பதின் அடிப்படையில் அவர் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றை நீதிமன்ற
மறு உத்தரவால் வெட்டினோம்.

இதற்காக அன்றைக்கு இருநாட்கள் உறக்கமில்லாமல், பாடுபட்டது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு சாதிக்கமுடியாத சாதனையை நிகழ்த்திய திருப்தியை அளித்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1984ல்
உச்சநீதிமன்றமும், குடியரசுத்தலைவரும் தள்ளுபடி செய்த மனுவை, அதன் அதிகாரங்களுக்குக் கீழ் உள்ள உயர்நீதிமன்றம் தூக்குதண்டனையை நிறுத்தி, ரத்து செய்த இந்த சம்பவம்  இந்தியாவிலே முதன்முதலாக நடந்த நிகழ்வு.

தண்டனை ரத்தான உத்தரவு கிடைத்தவுடன், இது உண்மைதானா என்று என்னையே மெய்மறக்கச் செய்தது.
முப்பதாண்டுகளுக்கு முன்  இன்றைக்கிருக்கும் அளவுக்கு ஊடகங்களும், தொலைதொடர்புகளும் இந்த அளவுக்கு இல்லை. இச்சம்பவங்களெல்லாம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. விடுதலைவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வாரிசை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றியது மனசாட்சிக்குப் பெருமையாக இருந்தது.

இம்மாதிரியான நிகழ்வுகள் பல  “தூக்குக்குத் தூக்கு” நூலில் பதிவுசெய்துள்ளேன்.  ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி வேலூர்  சிறைக் கொட்டடியிலிருக்கும், பேரறிவாளன், முருகன் , சாந்தன் போன்றோருடைய தூக்குதண்டனை கேள்விக் குறியாகவே வழக்குமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
வாழ்வா சாவா என்ற இந்த போராட்டத்தில், வழக்கில் சம்பந்தப்படாத இந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ”தூக்குக்குத் தூக்கு”  நூலின் இரண்டாவது பதிப்பில் இன்றையவரை நிகழ்வுகளும் மேம்படுத்தப் பட்ட பதிப்பாக பல செய்திகளைச் சேர்த்துள்ளேன்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் 125பேர் தூக்குதண்டனைக் கைதிகளாகவும்,  115பேர்  ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளாக  உள்ளனர்.
2013ம் ஆண்டில் இறுதியாக  தூக்குதண்டனை  நிறைவேற்றப்பட்டது.
‘இந்திய லா கமிசன்’ தூக்குத்தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்து தன்னுடைய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கவும் இருக்கின்றது.  உலக அளவிலும், இந்திய அளவிலும் தூக்குதண்டனை பற்றிய பல தரவுகளையும் தொகுத்தளித்துள்ளேன்.

அந்த தரவுகளைக் குறித்த செய்திகளை சர்வதேச மன்னிப்பு அவையும், இந்தியச் சிறைகளின் புள்ளிவிபரங்கள் குறித்த தரவுகள் மட்டுமல்லாமல், ஃப்ரெண்ட்லைன் மற்றும்  டைம்ஸ்,  எக்கனாமிஸ்ட்  போன்ற சர்வதேச ஏடுகள், சஞ்சிகைகளில் வெளிவந்த தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தொகுத்துள்ளேன்.

 -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-04-2015.

                                                     ********
Many countries, including India, use it to tackle real or perceived threats.
-By R.K. RADHAKRISHNAN

Every time a judge in an Indian court uses the term “rarest of rare”, what follows is the pronouncement of the death penalty. It appears that the judges go by the crime, the proven charges, and then pronounce the maximum punishment. Amnesty International’s latest report, ‘Death Sentence and Executions in 2014,’ says that 64 persons were sentenced to death in 2014, down from 72 in 2013.

Though 72 persons were sentenced to death in 2013, one hanging was carried out (that of Afsal Guru, who was convicted on a terror charge, that activists say, is deeply flawed). Actually, there have only been three executions in India in the past decade. Accounting for Guru, and the lone terrorist who was captured live after the 26/11 attack on Mumbai, Ajmal Kasab, there was only one more hanging during the period. From 2007 to 2014, as many as 649 persons have been sentenced to death.

Two terror convicts, who were in public memory because of the magnitude of the incidents they were said to be involved in, are on death row: the 2000 Red Fort attack accused Mohammad Arif, whose mercy petition is pending, and the 1993 Bombay serial blasts accused Yakub Memon, whose petition the President has rejected. Both have moved the Supreme Court.

With the Supreme Court laying down guidelines, there can be no more secret hangings. On January 21, 2013, a bench led by then Chief Justice of India P Sathasivam laid down guidelines requiring the government to give at least 14 days’ notice before an execution “to allow the prisoner to prepare himself… (and) have a last and final meeting with his family members”.

Amnesty notes an alarming number of countries used the death penalty to tackle real or perceived threats to state security linked to terrorism, crime or internal instability in 2014. At least 607 people were executed in 22 countries and at least 2,466 men and women were sentenced to death in 55 countries in 2014 alone, the Amnesty report says.

“But, alarming as they are, the figures paint a partial picture of the true extent to which people are hanged, shot or given the lethal injection across the world. The reality is likely to be much gloomier but many governments refuse to come clean about how many people they kill each year. In countries such as Eritrea, Malaysia, North Korea and Syria, very little information about the use of the death penalty is available due to restrictive state practice or political instability,” the report added.

No comments:

Post a Comment

2023-2024