Tuesday, April 7, 2015

தி இந்துவில் திரு. சமஸ் அவர்களின் நிலமும் சட்டமும் - ஒருபிடி மண்.



                                               

                        


தி இந்து தமிழ் நாளேட்டில், அன்புக்குரிய சமஸ் அவர்கள் எழுதும் நிலமும் சட்டமும் - ஒருபிடி மண் என்ற குறுந்தொடரை கடந்த இரண்டு நாட்களாக படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நல்ல பதிவு.

ஏற்கனவே கடலையும், கடல்சார்ந்த மக்களையும், நெய்தல் நிலத்தின் சிறப்பையும் திரு.சமஸ் அவர்கள் தி இந்து-வில் எழுதியது அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்து, சிந்திக்க வைத்தது.  அதில் நெய்தல் நில மக்களின் அன்றாடப் பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் நோவுகளையும், சமூகப் பொருளாதார நிலைகளையும் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டினார்.

தமிழ்நாட்டின் 1076 கிலோ மீட்டர் நீள கடற்கரையை, செய்திகளை ஒருமுகப்படுத்தி தன் எழுத்தின் மூலம் லாவகமாக தெளிவுபடுத்தினார். இன்றைக்கு நிலமும் சட்டமும் என்ற தொடரில் விவசாயியின் பாடுகளையும், இன்றைக்குப் பிரச்சனையாக உள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தினைப் பற்றியும் எழுதி வருகின்றார். அற்புதமான தொடர். அவருக்கும் தி இந்து நாளேட்டிற்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் விவசாயிகள் மட்டுமல்லாமல், தமிழ்கூறும் நல்லுலகமே தெரிவிக்கவேண்டும்.

நம்மிடம் சரியான வரலாற்றுப் பதிவு இல்லாமல் தான் கடந்தகால
பல தரவுகள்  கவனத்துக்கு வராமல் சென்று விட்டது. திரு. சமஸ் அவர்களின் முயற்சி எதிர்கால தமிழர்கள் அறிந்துகொள்ள எளிதாக பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் வெளிக்காட்டி வருகின்றார்.

அவருக்கும் தி இந்து ஆசிரியர் திரு. அசோகன் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பண்டைய தமிழ்மக்களின் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையைப் பற்றிய தொடர்களும் தி இந்துவில் தொடரவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-04-2015.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...