Wednesday, April 1, 2015

கேள்வியின் நாயகன் : புரியாத புதிர் “புடின்” - Vladimir Putin.




சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இளநங்கை ஒருவரோடு தொடர்பு உள்ளது என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவில்
நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி நாளில், மாநாடு முடிவடைய இரண்டுமூன்று மணி நேரம் இருக்கும் போது அனைத்து நாட்டு தலைவர்களும் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்க புடின் மட்டும் நான் தூங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மாநாட்டு அரங்கைவிட்டு வெளியே கிளம்பி விட்டார்.

அடுத்த நாள் மாஸ்கோவில் முக்கியப்பணி இருப்பதாகவும் சொல்லி அங்கிருந்து மாஸ்கோவுக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அப்படி எந்த அவசரப்பணியும் புடினுக்கு மாஸ்கோவில் இல்லை என்று செய்திகள் தெரிவித்தன. இப்படி இங்கிதம் இல்லாமல் ஒரு சர்வதேச மாநாட்டை மதிக்காமல் திடீரென எழுந்துபோவது ஒரு நாட்டின் தலைவருக்கு அழகா?

கிழக்கு உக்ரைன் பகுதியில் 11மாதங்கள் நடைபெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இச்சண்டையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயாராக இருந்திருக்கிறார் விளாடிமிர் புதின்.

அதேநேரம் பேருக்கு கிழக்கு உக்ரைன் பகுதியில் பேருக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தி கிழக்கு உக்ரைன் ரஷ்யா வசமாகிவிட்டது என்று அறிவிக்கவும் செய்தார். எதிர்ப்பாளர்களுக்கு கிரீமியா பகுதி இணைக்கப்பெற்றது இணைக்கப்பெற்றதுதான் என்று தடாலடியாக அறிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக மாஸ்கோவில் உடல்நிலை சரியில்லாமல் புடின் இருக்கிறார் என்றும், பத்துநாட்களாக அவரைக் காணவில்லை என்றும் பலவிதமாக உலக செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகின.

62வயதான புடினுடைய நடமாட்டம் எங்கே என்ற கேள்விகள் எழவும் அவருடைய அலுவலகத்திலிருந்து மறுப்பு அறிவிக்கைகளும், வீடியோ க்ளிப்பிங்குகளும் வெளியிடப்பட்டன.

புடின் நோய்வாய்ப்பட்டு இயலாமல் இருக்கிறார் என்றும்; ஒருசிலர் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் ; தான் விரும்பும் நபரின் பிறந்த நாளுக்காக வெளிநாடு சென்றுவிட்டார் என்றும் பலரால் பலவிதமாக பேசப்படுகின்றன. புடினைக் குறித்து முன்னாள் ரஷ்ய அதிபர் கோபர்சேவும் கிண்டலடித்துள்ளதாக செய்திகள் வந்தன.

ரஷ்யா ஒரு காலத்தில் இரும்புத்திரை நாடு என்று சொன்னார்கள். இன்றைக்கு புடினுடைய கதையும் இரும்புத்திரையாக உள்ளது.
கிரீமியாவை இணைத்து ஓராண்டு நிறைவுறுகிற நேரத்தில் ஏற்கனவே ரஷ்யா ஒப்புக்கொண்ட மின்ஸ்க் ஒப்பந்த நடைமுறையிலும் சிக்கல்கள் தெரிகின்றன.

நேற்றைக்கு அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடைகள் நீடிக்கும் என்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் சரியாக அமையவில்லையென்றால் பொருளாதாரத் தடைகள் மேலும் தொடரும் என்று கூறி உள்ளது.

பிரான்ஸும் ஜெர்மெனியும் முயற்சி எடுத்துத்தான் ரஷ்ய-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதிலும் சில குளறுபடிகள் எழுந்துள்ளன. இப்படியான நேரத்தில் திடீரென புடினைக் காணவில்லை என்பது மர்மமாக இருக்கின்றது என சர்வதேச சமுதாயம் கேள்விக்கணை தொடுக்கின்றது.

கேள்வியின் நாயகனான புடின் கேள்விக்கணைகளுக்கு பதில் அளிப்பாரா..

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-03-2015

‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...